SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விளையாட்டு துளிகள்

2019-01-24@ 00:25:05

* பாகிஸ்தானுடன் டர்பனில் நேற்று முன்தினம் நடந்த 2வது ஒருநாள் போட்டியில், தென் ஆப்ரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பாகிஸ்தான் 45.5 ஓவரில் 203 ரன் ஆல் அவுட் (சர்பராஸ் 41, ஹசன் அலி 59); தென் ஆப்ரிக்கா 42 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 207 (வான் டெர் டுசன் 80*, மில்லர் 31, பெலுக்வாயோ 69*). இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது போட்டி செஞ்சுரியனில் நாளை நடைபெறுகிறது.
* பாகிஸ்தான் அணியுடன் நடைபெற உள்ள கடைசி 3 ஒருநாள் போட்டிகளுக்கான தென் ஆப்ரிக்க அணியில் ஒலிவியர், பேட்டர்சன், கிளாசன் நீக்கப்பட்டு ஹெண்ட்ரிக்ஸ், டி காக், ஸ்டெயின் சேர்க்கப்பட்டுள்ளனர்.
* திருவனந்தபுரத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் (அங்கீகாரமற்றது) இந்தியா ஏ அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இங்கிலாந்து லயன்ஸ் 50 ஓவரில் 285/7 (கேப்டன் பில்லிங்ஸ் 108*, டேவிஸ் 54); இந்தியா ஏ 49.1 ஓவரில் 288/7 (கேப்டன் ரகானே 59, அன்மோல்பிரீத் 33, ஷ்ரேயாஸ் 45, இஷான் கிஷன் 57*, குருணல் 29, அக்சர் 18, ஷர்துல் 11*). ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஏ 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி நாளை நடக்கிறது.
* ரஞ்சி கோப்பை தொடரில் இன்று தொடங்கும் அரை இறுதி ஆட்டங்களில் கேரளா - விதர்பா (களம்: வயநாடு), கர்நாடகா - சவுராஷ்டிரா (களம்: பெங்களூரு) மோதுகின்றன.
* பிக் பாஷ் டி20 தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 44 ரன் வித்தியாசத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்சை வீழ்த்தியது. மெல்போர்ன் ஸ்டார்ஸ் 20 ஓவரில் 167/2 (டங்க் 72*, ஸ்டாய்னிஸ் 53, ஹேண்ட்ஸ்கோம்ப் 36); அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் 19.4 ஓவரில் 123 ரன்னுக்கு ஆல் அவுட் (கேரி 30, லீமேன் 40).


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-04-2019

    26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்