SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநகர பஸ் மேற்கூரை மீது நடனம் கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது: போலீஸ் குவிப்பால் பரபரப்பு

2019-01-24@ 00:20:55

வியாசர்பாடி: சென்னை வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் டாக்டர் அம்பேத்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கடந்த 22ம் தேதி காலை காரனோடையில் இருந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு செல்லும் மாநகர பஸ்சில் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி, பஸ்சுக்கு மாலையிட்டு மேற்கூரையில் 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாட்டு பாடி நடனமாடி, கோஷமிட்டபடி வந்தனர். தகவலறிந்து எம்கேபி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மாநகர பஸ்சில் நடனமாடி வந்த மாணவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.  

இதற்கிடையில், மாநகர பஸ்சில் மாணவர்கள் நடனமாடிய புகைப்படங்கள் பல்வேறு நாளிதழ்களில் வெளியானது.
இந்நிலையில் பொங்கல் விழா என்ற பெயரில் மாநகர பஸ் மேற்கூரையில் நடனமாடிய அம்பேத்கர் அரசு கல்லூரியை சேர்ந்த 6 மாணவர்களை நேற்று மாலை எம்கேபி நகர் போலீசார் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், 3ம் ஆண்டு மாணவன் எருக்கஞ்சேரி நவீன் (20), 2ம் ஆண்டு மாணவர்கள் ஆவடி, கவுரிபேட்டை 2வது தெரு மோகன்குமார் (19), வியாசர்பாடி கோபால் தெரு சந்தோஷ்குமார் (19), செங்குன்றம் வேணுகோபால்சாமி தெரு ரிஸ்வான் பாஷா (19), அதே பகுதி பன்னீர்செல்வம் தெரு அப்துல் ஐயும் (19), மணலி பார்த்தசாரதி 3வது குறுக்கு தெரு பிரவீன் (19) என தெரிந்தது.  

இதையடுத்து 6 பேரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனா். இதற்கிடையில், மாணவர்களை போலீசார் கைது செய்ததை அறிந்ததும், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கல்லூரி வளாகத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mallakamb_mumbai

  மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

 • varanasi_modi123

  டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

 • china_lamfesti1

  சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

 • 2mili_nall

  காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

 • pakisthan_saudi1

  பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்