SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புழல் சிறை கைதிகளிடம் செல்போன் பறிமுதல்: 2 பேர் கைது

2019-01-24@ 00:16:28

புழல்: புழல் சிறையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று 800க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில் ஒருசில கைதிகள் செல்போன் வைத்திருப்பதாக சிறை உயரதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
எனவே சிறை அதிகாரிகள் சிறையில் உள்ள ஒவ்வொரு அறைகளிலும் நேற்று அதிகாலை சோதனை நடத்தினர். அப்போது. 2 கைதிகளிடம் தலா ஒரு செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் மேற்குவங்கத்தை சேர்ந்த உத்தம் மண்டல் (28), காஞ்சிபுரம் போலீசாரால் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு கடந்த 2016ம் ஆண்டு முதல் ஆயுள் கைதியாக உள்ளார்.

இதேபோல், தஞ்சை மாவட்டம் திருவாரூர் பகுதியைச் சேர்ந்த ரஜினி (45). திருவாரூர் டவுன் போலீசாரால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 2016ம் ஆண்டு முதல் ஆயுள் கைதியாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவர் மீதும் புழல் போலீசில் சிறை ஜெயிலர் தர்மராஜ் புகார் கொடுத்தார். புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். புழல் சிறைக்குள் கைதிகளிடம் செல்போன் எப்படி வந்தது? செல்போனை வைத்து ஆயுள் கைதிகள் என்ன திட்டம் தீட்டினார்கள்? என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

* கொடுங்கையூர் கடும்பாடி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர் (42). ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு புழல் இரட்டை ஏரி ஜிஎன்டி சாலை ஓரத்தில் ஆட்டோவை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக ஸ்ரீதர் ஒதுங்கினார். அப்போது ஒரே பைக்கில் முகமூடி அணிந்து வந்த 3 பேர், ஸ்ரீதரை திடீரென கத்தியால் வெட்டிவிட்டு ₹45 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்துச்சென்றனர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
* கொடுங்கையூர் எவரெடி காலனியை சேர்ந்தவர் தாஸ் (46). இவரது மகன் நவீன் (19). மாதவரம் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன், தன்னுடன் கல்லூரியில் படிக்கும் பெண்ணுடன், நவீனுக்கு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த நவீன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
* புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (40). மீனவர். இவரது மனைவி ரேணுகா. தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 21ம் தேதி ராமலிங்கம், அதே பகுதி காந்தி, சோபன், ராஜா, கோதண்டராமன் ஆகியோருடன் கடலில் மீன்பிடிக்க சென்றார். அங்கு மீன் பிடித்தபோது ராமலிங்கம் நிலைதடுமாறி கடலில் விழுந்து மாயமானார். காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமலிங்கத்தை தேடி வருகின்றனர்.
* வண்ணாரப்பேட்டை, சிமெட்ரி சாலையை சேர்ந்தவர் மதன்குமார். இவரது மகன் அஸ்வின் டேனியல்குமார் (19). மதுரவாயல் தனியார் கல்லூரியில் பி.டெக்., 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியை சேர்ந்த ராகுல் (20). இவரும் அதே கல்லூரியில் படித்து வருகிறார்.
நேற்று கல்லூரி சென்றுவீட்டு இருவரும் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். வேலப்பன்சாவடி அருகே 2 லாரிகளுக்கு இடையே சென்றபோது பைக்கில் உரசியதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் அஸ்வின் டேனியல் குமார் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்தில் இறந்தார். ராகுலின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை தேடுகின்றனர்.
* கும்பகோணத்தை சேர்ந்தவர் அலமேலு (86). தனது மகன் கண்ணனுடன் (38) ரயில் மூலம் சென்னை தாம்பரம் வந்தார். ஜிஎஸ்டி சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த  கார் மோதி அலமேலு இறந்தார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-02-2019

  17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 16-02-2019

  16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • BrightBrussels

  ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

 • francelemon

  பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

 • TitanicReplicaChina

  முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்