நடுத்தர மக்களின் ஓட்டுகளை பெற இந்திய இறையாண்மையை பாரதிய ஜனதா அழிக்கிறது
2019-01-24@ 00:14:55

திருப்பரங்குன்றம்: நடுத்தர மக்களின் ஓட்டுகளை பெற இந்திய இறையாண்மையை பாஜ அழித்து வருவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டினார்.மதுரை திருப்பரங்குன்றத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:பெண் குழந்தைகள் மேம்பாட்டு நிதி திட்டத்தில் இருந்து, 56 சதவீதம் பிரதமர் மோடியின் விளம்பரத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருக்கும்போது, மதத்தின் பெயரால் நாடு முழுமையாக பாஜவால் துண்டாடப்படுகிறது. நடுத்தர மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்ற நோக்கில் இந்திய இறையாண்மையை பாஜ அழித்து வருகிறது.
இந்திய ஜனநாயக முறைப்படி தேர்தலுக்கு பின்பு தான் பிரதமர் தேர்வு செய்யப்படுவார். நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்ற சம்பிரதாயம் எதும் இல்லை. பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் என முன்னிறுத்தி தவறான முன்னுதாரணத்தை கொண்டு வருகிறது. முன்னேறிய ஜாதிகளுக்கு 10 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு திட்டம் என்பது, எந்தவித கணக்கெடுப்பும் எடுத்துக்கொள்ளாமல் அவசரகதியில் கொண்டு வரப்படுகிறது. இட ஒதுக்கீடு குறித்து விவாதம் வந்தபோது, அனைத்து ஜாதியினருக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அரசு வேலைகள் குறிப்பாக ரயில்வே உள்ளிட்ட பணிகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும் நிலை உள்ளது. எனவே எந்தவித கணக்கெடுப்பும் இல்லாமல் இட ஒதுக்கீடு செய்வது சரியாக இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
கலைஞர் மீது அளவுகடந்த பாசம் கொண்டவர் விஜயகாந்த்; சந்திப்புக்கு பின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி
அதிமுகவையும், முதல்வரையும் விமர்சித்து விட்டு பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது : திமுக தலைவர் ஸ்டாலின் கடும் விமர்சனம்
அதிமுக - பாஜக பேச்சில் இழுபறி நிலையில் தேமுதிகவில் 24-ம் தேதி முதல் விருப்பமனு விநியோகம்... விஜயகாந்த் அறிவிப்பு
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு தீவிரம்; மதிமுக, வி.சி.க. முஸ்லீம் லீக் கட்சியுடன் இன்று ஆலோசனை
கர்நாடக கூட்டணி அரசை இரண்டரை முதல்வர்கள் ஆள்கிறார்கள் - அமித்ஷா
கூட்டணி அமைக்க விரும்பினால் கெஜ்ரிவால் என்னிடம் பேச வேண்டும் : ஷீலா தீட்சித் ஆவேசம்
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்
கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு
உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்
மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி