SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அணைகளில் நீர் இருப்பு குறைகிறது ... கோடை காலத்தில் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்

2019-01-24@ 00:13:51

மஞ்சூர்: தொடர் மின்சார உற்பத்தி, குடிநீர் தேவை உள்ளிட்ட காரணங்களால் அணைகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் கோடை காலத்தில் மின்சார உற்பத்தி பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.நீலகிரி மாவட்டத்தில் 12 நீர் மின் நிலையங்கள் உள்ளன. குறிப்பாக அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, கிளன்மார்கன் உள்ளிட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன்படி குந்தாவில் 60 மெகாவாட், கெத்ைதயில் 175 மெகாவாட், பரளியில் 180 மெகாவாட், பில்லூரில் 100 மெகாவாட், அவலாஞ்சியில் 40 மெகாவாட், காட்டுகுப்பையில் 30 மெகாவாட், என பல்வேறு அணைகளில் இருந்து மொத்தம் 833.65 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல் மின் உற்பத்திக்கு பின் ெவளியேற்றப்படும் தண்ணீர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய பவானி, பாசனப்படுகை விவசாயிகளின் முக்கிய நீராதாரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக போதிய மழையின்மை காரணமாகவும், பனிபொழிவு காரணமாகவும் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் ஆறுகள், சிற்றோடைகளில் நீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. அதேேபால், அணைகளில் நீர் வரத்து பலமடங்கு குறைந்துள்ளதுடன் இருப்பில் உள்ள நீரின் மூலமாகவே மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இது தவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கு தண்ணீர் எடுப்பதால் அணைகளில் நீர் மட்டம் சரிந்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்யாத பட்சத்தில் வரும் கோடை காலத்தில் மின்நிலையங்களில் தடையின்றி மின்சார உற்பத்தி மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்