SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நவீன கப்பலை வடிவமைத்து 12 வயது சிறுவன் அசத்தல்

2019-01-23@ 14:31:43

மும்பை : மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் வகையில் கப்பல் ஒன்றை வடிவமைத்து அசத்தி இருக்கிறான். புனே நகரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஹஸீக் காஸி தான் இந்த நவீன கப்பலை வடிவமைத்து இருக்கிறான். சென்டரிபீட்டல் ஃபோர்ஸ் எனப்படும் மைய நோக்கு விசையால்  இயங்கும் இந்த கப்பல் கடலில் இருந்து கழிவுகளை சேகரித்து தரம் வாரியாக பிரிக்கும் தன்மையுடையது என்கிறார் ஹஸீக் காஸி.

இதனால் கடல் வாழ் உயிர்களுக்கு பாதிப்பு இருக்காது என்கிறார் ஹஸீக் காஸி. தண்ணீர் கப்பலுக்குள் உறிஞ்சப்படும் போது  அதில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள் உயிரினங்களை மீண்டும் கடலுக்குள் தள்ளிவிடுவமாம். கடலில் கலக்கும் கழிவுகளை அகற்றும் ஹஸீக் காஸியின் புதிய திட்டம் சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த ஹஸீக் காஸி பேட்டியில் கூறியுள்ளதாவது,'ஒரு நாள் நான் கைகளை கழுவும் போது நீர் செல்லும் போக்கை கவனித்தேன்; அப்போது, உலகில் உள்ள ஆழமான கடல்களுக்கு கீழே சுத்தம் செய்யவும், கடல் வாழ் உயிரினங்களை காப்பாற்றவும் எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது; அப்போது தண்ணீரின் சுழற்ச்சியையும், அது உறிஞ்சப்படுவதையும் கண்ட போது அதே போல் நமது கடல்களில் உள்ள கழிவுகளை உறிஞ்சுவதற்கு அ‌தே முறையை பயன்படுத்த முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன்; அதன் முயற்சியின் பயனாக எர்விஸ் என்ற கப்பலை வடிவமைத்தேன்; காற்று மாசு ஏற்படாதவாறு இந்த கப்பல் ஹைட்ரஜன் வாயுவால் இயக்கப்படும் பெரிய படகாகும்;  இதன் மூலம் கடலின் மேற்பரப்பில் உள்ள கழிவுகளை அகற்றுதல், சேகரிக்கப்பட்ட கழிவுகளை பகுப்பாய்வு செய்தல், மூலைகளில் கழிவுகளை சேர்த்தல் ஆகியவற்றை செய்ய முடியும்; இவ்வாறு அவர் கூறினார். மேலும்  கப்பலின் மாதிரியை உருவாக்க விஞ்ஞானிகள் மற்றும் 3டி வடிவமைப்பாளர்களுடன் தான் பணிபுரிந்ததாக ஹாசிக் காஸி தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-02-2019

  23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_pkankatchui1

  சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

 • israelmoonshuttle

  சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

 • chennai_laksh1

  திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்