SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீஞ்சூர் அருகே ஒரு மாதத்துக்கு முன் மாயமான பெண் ஏரியில் சடலமாக மீட்பு: கொலையா விசாரணை

2019-01-23@ 00:20:43

சென்னை: மீஞ்சூர் அருகே வீட்டில் இருந்து ஒரு மாதத்திற்கு முன் மாயமான பெண், ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு பெரிய கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி செல்லம்மாள் (60). இவர் கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி ஆடு மேய்ப்பதற்காக சென்றார். ஆனால், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் கோபாலின் மகன் செல்வம் மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார்.புகாரின்படி, போலீசார் காணாமல் போன செல்லமாவை தேடிவந்தனர். ஆனால், அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று தேவதானம் ஏரியில் பெண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக பொதுமக்கள் மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், மீஞ்சூர் போலீசார் சம்பவ இடம் சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் ஆடு மேய்க்கும் போது ஏரியில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது யாரேனும் கடத்தி கொன்றனரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்