SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயிருக்குப் போராடும் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு தொகை நிரப்பப்படாத காசோலை வழங்கிய க்ருணல் பாண்ட்யா

2019-01-22@ 16:40:58

வதோதரா: உயிருக்குப் போராடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேகப் மார்ட்டினுக்கு தொகை நிரப்பப்படாத காசோலையை க்ருணல் பாண்ட்யா கொடுத்துள்ளார்.  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜேகப் மார்ட்டின். குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த இவர் சவுரவ் கங்குலியின் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 1999ம் ஆண்டு இடம் பெற்று, 2001ம் ஆண்டு வரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். மேலும் கடந்த 2001ம் ஆண்டு, ரஞ்சிக் கோப்பைக்கான பரோடா அணியின் கேப்டனாக இவர் ஆடியுள்ளார். அந்த ஆண்டு பரோடா அணி, ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் ரயில்வே அணியிடம் தோல்வியடைந்து, பட்டம் பெறும் வாய்ப்பை இழந்தது. 138 முதல் தரப் போட்டிகளில் ஆடியுள்ள ஜேகப் மார்ட்டின் அவற்றில் 9,192 ரன்களை (சராசரி 47 ரன்கள்) குவித்துள்ளார்.

கடந்த டிச.28ம் தேதி வடோதரா அருகே சாலை விபத்தில் சிக்கி ஜேகப் மார்ட்டின் படுகாயமடைந்தார். வதோதராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், கவலைக்கிடமான நிலையில் உள்ளார் என்றும் வென்டிலேட்டர் கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. விபத்தில் கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட அவரது உள்ளுறுப்புகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், இதுவரை அவரது சிகிச்சைக்கான செலவு ரூ.11 லட்சத்தை தாண்டி விட்டதாகவும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரது சிகிச்சைக்கு தேவையான பணம் தங்களிடம் இல்லை என்றும், இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் முன்னாள் வீரர்கள் அவரது சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்றும் அவர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதையடுத்து ஜேகப் மார்ட்டினின் சிகிச்சைக்கு பிசிசிஐ ரூ.5 லட்சம் வழங்கியுள்ளது. பரோடா கிரிக்கெட் அசோசியேஷனும் ரூ.3 லட்சம் வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரான க்ருணல் பாண்ட்யா, தொகை நிரப்பப்படாத காசோலையை ஜேக்கப் மார்டினின் சிகிச்சை செலவுக்கு கொடுத்துள்ளார். மேலும் ஒரு லட்சத்துக்கு குறைவாக நிரப்பாமல், எவ்வளவு வேண்டுமானாலும் காசோலையில் நிரப்பிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்