SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அபிஷேகத்துக்காக பக்தர்கள் கொடுக்கும் பாலில் டீ, காபி போட்டுக் குடிக்கும் அதிகாரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-01-22@ 00:20:19

‘‘வசூல் நகரங்களுக்கு முன்பதிவு செய்றாங்களாமே போலீஸ் அதிகாரிகள்’’ என நமுட்டு சிரிப்போடு கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆமா.. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் 3 ஆண்டுகளாக ஒரே ஊரில் பணியில் இருக்கும் அதிகாரிகள், சொந்த ஊரில் இருக்கும் அதிகாரிகளை பிப். 28க்குள் இடமாற்றம் செய்ய வேண்டுமென்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருக்கு.
 விருதுநகர் மாவட்ட போலீஸ்துறையில் பலர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவும், சொந்த மாவட்டத்திலும் ஒரே இடத்திலும் இருந்து சாதனையாய் சாதித்து ‘டப்பு' பார்த்து வருகிறார்களாம். அத்தனை பேருக்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறப்போவது உறுதி என்பது தெரிந்து விட்டதாம்.
 லிஸ்ட் எடுக்கும் வேலை துவங்கிய நிலையில், அதிக மாமூல் வரும் இடங்களை விசாரித்து முன்பதிவு செய்ய ஆள் பிடிக்க துவங்கிட்டாங்களாம் என்றார் விக்கியானந்தா.
‘‘ஊழியர்களுக்கு பச்சை கொடி காட்டி டாஸ்மாக்கில் கல்லா கட்டுறாராமே அதிகாரி’’ என்று ஆச்சர்யம் தொனிக்க அடுத்த கேள்வியை தொடுத்தார் பீட்டர் மாமா.
 ‘‘மாங்கனி மாநகரில் குடிமகன்கள் புலம்பல் ரொம்ப அதிகமா இருக்குதாமே. ஆமா, கடந்த காலங்களை காட்டிலும் தற்போது டாஸ்மாக் கடையில் இஷ்டத்திற்கு ரேட்டை உயர்த்தி வசூலிப்பது தான், அந்த புலம்பலுக்கு காரணம்னு சொல்றாங்க. சமீபத்தில் புதிய டாஸ்மாக் அதிகாரியாக வந்தவர், கடைகளுக்கு ஆய்வுக்கு செல்லும்ேபாது, மேற்பார்வையாளர்களிடம் ‘நிர்ணயித்த விலையை விட, எவ்வளவு விலை வேண்டுமானாலும் உயர்த்தி விற்றுக்கொள்ளுங்கள். அதைப்பத்தி நான் கண்டுக்கமாட்ேடன். ஆனா... ஒவ்வொரு கடையில இருந்தும் மாதா, மாதம் கமிஷன் ெதாகை மட்டும் கரெக்டா வந்து ஆகணும்’ என்று கறாராக கூறிவருகிறாராம். அதிலும், அதிக சேல்ஸ் நடக்கும் கடைக்கு ஒரு ரேட்டும், சுமாராக சேல்ஸ் ஆகும் கடைகளுக்கு ஒரு ரேட்டும்னு நிர்ணயித்து வசூல் மழையில் நனைந்து வருகிறாராம். அதிகாரியே என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் எனக்கூறி விட்டதால், டாஸ்மாக் கடை ஊழியர்கள் தங்கள் இஷ்டத்திற்கு ரேட்டை ஏத்தி சரக்கு விற்பனையில் கல்லா கட்டி வருகிறார்களாம். மொத்தமுள்ள 204 கடைகளில் இருந்தும் மினிமம் தலா 3 ஆயிரம் ரூபா வீதம் அதிகாரி மட்டும் சுருட்டி வருவதாக அவருக்கு கீழ் இருக்கும் இரண்டாம் கட்ட அதிகாரிகள் பரபரப்பாக பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சுவாமி அபிஷேகத்துக்கு வரும் பாலை, டீ போட்டு குடிக்கிறார்களாமே.. அப்படியா..’’
 ‘‘அந்த கொடுமைய சொல்றேன் ேகளு.. நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்வதற்காக பால் பாக்கெட்டுகள் மற்றும் பாத்திரங்களில் கொண்டு வந்து கோயிலில் கொடுக்கிறார்கள். இதை கோயிலில் உள்ள பிளாஸ்டிக் டிரம்களில் ஊற்றி வைப்பார்கள். பின்னர் சில்வர் குடங்களில் எடுத்து ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த கோயில் வளாகத்திலேயே இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் என 30க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்கள் அலுவலகத்துக்குள்ளேயே மின்சார அடுப்பை பயன்படுத்தி, பக்தர்கள் ஆஞ்சநேயருக்கு அபிஷேகத்திற்காக கொடுக்கும் பாலை எடுத்து தங்களுக்கு டீ, காபி போட்டு குடிக்கின்றனர். சுவாமிக்கு அபிஷேகம் செய்ய பக்தர்கள் கொடுக்கும் பாலை, இப்படி சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துவது குறித்து எந்த அதிகாரியும் கண்டு கொள்வதில்லை என்பது நியாயமாக நடக்கும் சில ஊழியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கலெக்டருக்கு எதிராக பிடிஓக்களை தூண்டுகிறாராமே அதிகாரி..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்
துறையில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பொறுப்பு அதிகாரியாக உள்ள மில்டனானவர் மாவட்ட ஊராட்சி நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார். இவர் பொறுப்பு வகிக்கும் பதவியில் இருந்த பிச்சையானவர் பல்வேறு புகார்கள் காரணமாக சத்துணவுக்கு மாற்றப்பட்ட நிலையில் மில்டனானவர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டாராம். இவரும் கொஞ்ச காலம் அமைதியாக இருந்து விட்டு, தனக்கு முன்னர் பொறுப்பில் இருந்தவர்களை பின்பற்றி நடக்க தொடங்கி விட்டாராம். அதாவது பிடிஓக்கள், துணை பிடிஓக்கள் பணியிட மாற்றலை ஒட்டுமொத்தமாக செய்யாமல் தனித்தனியாக ஆர்டர் போட்டு வருகிறாராம். இதற்காக பெற வேண்டியதை பெற்று விடுவாராம்.
 பிடிஓக்களிடம், ‘உங்களுக்கு அதிக வேலைப்பளு வழங்கப்படுகிறது. கலெக்டரிடமும், திட்ட இயக்குனரிடமும் எங்களால் முடியாது என்று தைரியமாக சொல்லுங்கள்’ என்று தூண்டி விடுகிறாராம். இதுபற்றி அறிந்த கலெக்டரும், திட்ட இயக்குனரும், மில்டனானவருக்கு ‘நோஸ்கட்’ கொடுக்கும் வேலைகளில் இறங்கினார்களாம். இதுபற்றி தெரிய வந்ததும், எங்கே ஜூன் மாதம், தான் ஓய்வு பெறும்போது பிரச்னை வந்துவிடுமோ என்று பயந்து பிப்ரவரியிலேயே விருப்ப ஓய்வு பெற்று செல்லும் வகையில் விஆர்எஸ் கடிதம் கொடுத்து விட்டாராம். தற்போது இதுதான் ஊரக வளர்ச்சித்துறையில் பரபரப்பாக பேசப்படுகிறது’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

 • syriaairstrike

  சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

 • boliviafire

  பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

 • russiatomatofight

  ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்