SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு : சட்டத்திருத்த அரசாணை வெளியீடு

2019-01-22@ 00:14:10

சென்னை: கட்டுமான ெதாழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்குவது தொடர்பாக சட்ட திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை மாநகராட்சியில் மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தபட உள்ளது. தமிழகத்தில் சென்னை மாநகராட்சியில், 407 அம்மா உணவகங்களும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 247 அம்மா உணவகங்களும் மற்றும் ஊரகப் பகுதிகளில் 4 அம்மா உணவகங்கள் என்று மொத்தம் 658 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் காலை ஒரு ரூபாய்க்கு இட்லி, ₹5 க்கு பொங்கல், மதியம் ₹3க்கு தயிர் சாதம், ₹5க்கு பலவகை சாதங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள உணவகங்களில் மட்டும் இரவில் ₹3க்கு 2 சப்பாத்திகள்  விற்பனை செய்யப்படுகின்றன.சென்னையில் நாள் ஒன்றுக்கு 2.50 லட்சம் மக்கள் அம்மா உணவகங்களில் உணவு உட்கொள்கின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் 99.58 கோடி இட்லிகளும், 35.8 கோடி பலவகை சாதங்களும், 25.7 கோடி சப்பாத்திகளும் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கட்டுமான தொழிலாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்நிலையில் இதற்கான பணியை தொழிலாளர் நலத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் மொத்தம் 29 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கு எந்த வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. கட்டுமான நிறுவனங்கள் செய்யும் பணிகள் மதிப்பீட்டுத் தொகையில் ஒரு சதவீத தொகையை வாரியத்திற்கு செலுத்த வேண்டும். இந்த ெதாகையை கொண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவித் தொகை வழங்கப்படும். கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை உள்ளவர்கள் அதைக் காட்டி அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு உட்கொள்ளலாம். அவ்வாறு உணவு உட்கொண்டவர்களின் எண்ணிக்கை சம்பந்தப்பட்ட அறிக்கையை உள்ளாட்சி அமைப்புகள் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்திற்கு அனுப்பும். அதற்கான தொகையை நல வாரியம் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும். இந்த திட்டத்தை கட்டுமான தொழிலாளர்களில் நலத் திட்டத்தில் சேர்ப்பதற்காக சட்ட திருத்தம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தபட உள்ளது. இந்த திட்டம் எப்போது முதல் அறிமுகப்படுத்தப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

45 ஆயிரம் பேர்
சென்னை மாவட்டத்தில் 45 ஆயிரத்து 347 தொழிலாளர்கள் கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக, சேலம் மாவட்டத்தில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 344 பேர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர். இரண்டாவதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 1 லட்சத்து 84 ஆயிரத்து 747 பேர் பதிவு செய்துள்ளனர். குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 888 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்