SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிம்ஸ் பூங்காவில் பறவைகளை புகைப்படம் எடுக்க வனஉயிரின ஆர்வலர்கள் ஆர்வம்

2019-01-21@ 12:17:28

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை  காண சுற்றுலா பயணிகள் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வருகின்றனர். அதேபோல், வன உயிரின ஆர்வலர்கள் மற்றும் வன உயிரின புகைப்பட கலைஞர்கள் இங்குள்ள பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்து புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த குவிகின்றனர். இங்குள்ள பூங்காக்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதியான சோலை மர காடுகளில் ஏராளமான பறவைகள் உள்ளதால் அதனை புகைப்படம் எடுக்க அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது பனிகாலம் என்பதால் வின்டர் விசிட்டிங் எனப்படும் பறவை வகைகள் அதிகளவில் நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளன.

மேலும், பனிகாலத்தில் மட்டுமே பார்க்க கூடிய இவ்வகையான பறவைகளை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த வன உயிர் புகைப்பட கலைஞர்கள் மற்றும் வன உயிர் ஆர்வலர்கள் அதிகளவில் தற்போது ஊட்டியில் முகாமிட்டுள்ளனர். மேலும் காலை மற்றும் மாலை நேரத்தில் பறவைகள் அதிகளவில் தென்படுவதால் அவற்றை புகைப்படம் எடுக்க காத்திருக்கின்றனர். குறிப்பாக, குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் நூற்றாண்டு பழமையான மரங்கள் மற்றும் பல்வேறு வகையான மலர் செடிகள் சோலை மரங்கள் காணப்படுவதால் இங்கு ஏராளமான பறவைகள் உள்ளன. இதனை புகைப்படம் எடுப்பத்தில் வன உயிரின புகைப்பட கலைஞர்கள் குவிந்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்