SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அணைக்கரைபட்டி ஜல்லிக்கட்டு வீரர்கள் உள்பட 15 பேர் காயம்

2019-01-21@ 12:16:39

மணப்பாறை:  வையம்பட்டி அருகேயுள்ள பெரிய அணைக்கரைபட்டியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில்  மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் 15 பேர் காயமடைந்தனர். சீறிப்பாய்ந்த காளையின் கால் தடுக்கி வலதுகால் உடைந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா வையம்பட்டியை  அடுத்த பெரிய அணைக்கரைபட்டி தூய செபஸ்தியார் ஆலய திடலில் நேற்று (20ம் தேதி) ஜல்லிக்கட்டு போட்டி நடத்தது. மணப்பாறை தாசில்தார்  சித்ரா போட்டியை துவக்கி வைத்தார். மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை , சிவகங்கை , திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 456 காளைகளும், 282 மாடுபிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்றனர். போட்டி துவங்கியதும் முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

அதன் பின்னர், மற்ற காளைகள் ஒவ்வொன்றாக, வாடிவாசலிலிருந்து மிகவும் ஆக்ரோ சத்துடன்  சீறிப் பாய்ந்தன. இந்த காளைகளை போட்டிபோட்டு அடக்க முயன்ற 10 மாடுபிடி வீரர்கள் உள்பட 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு வாடிவாசல் பக்கத்திலேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதேபோல் வையம்பட்டி அருகேயுள்ள என்.பூலாம்பட்டியை சேர்ந்த  அடைக்கலராஜ் என்பவரின் காளை வாடிவாசலிலிருந்து சீறிப் பாய்ந்து  வெளியேறிய போது கால் தடுக்கி, அதன் வலது கால் ஒடிந்தது. இதனையடுத்து,  வலியால் துடித்த காளையை மைதானத்திலிலிருந்து  வெளியே கொண்டு வந்து  ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக மணப்பாறை கால்நடை மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டது.  நிகழ்ச்சியில் காளைகளை லாவகமாக பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், அண்டா, குடம், மற்றும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. மணப்பாறை டி.எஸ்.பி சர்மு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்