SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பறவைகளை பாதுகாக்க வலியுறுத்தி ஆண்டாள் வேடமணிந்து பாசுரம் பாடிய மாணவியர் : திருவில்லிபுத்தூரில் அசத்தல்

2019-01-21@ 12:13:40

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் ‘பறவைகளை காப்போம்’ என்ற தலைப்பில் ஆண்டாள் வேடமணிந்து நூற்றுக்கணக்கான மாணவியர் பாசுரம் பாடி அசத்தினர். மதுரை கலாகேந்திரா கல்ச்சுரல் சொசைட்டி சார்பில், விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அரிமா மேல்நிலைப்பள்ளியில் ‘பறவைகளை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் நூற்றுக்கணக்கான மாணவியர் ஆண்டாள் வேடமிட்டு பாசுரம் பாடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனையொட்டி, நேற்று மாலை அரிமா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், 3 வயது வயது குழந்தைகள் முதல் கல்லூரி படிக்கும் மாணவியர் வரை, நூற்றுக்கணக்கானோர் ஆண்டாள் வேடமணிந்து ஆண்டாள் பாசுரங்களை பாடினர்.

இந்நிகழ்ச்சியில் மதுரை கலாகேந்திரா இயக்குனர் சைலஜா மகாதேவன், லயன்ஸ் பள்ளி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி முதல்வர் சுதாகரன், கவிஞர் குமாரிலட்சுமி மகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், கலந்து கொண்ட மாணவ, மாணவியர் அனைவருக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியைக் காண மாணவ, மாணவியரும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_viruthu_iyo1

    அமைதிக்கான விருது, காந்தி சிலை திறப்பு : பிரதமர் மோடியின் தென் கொரிய பயண புகைப்படங்கள்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்