SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பணிகள் முடிவடையாத நிலையில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் அமைகிறது 3 சுங்கச்சாவடிகள்

2019-01-21@ 12:03:33

சென்னை: வண்டலூர்-மீஞ்சூர் இடையிலான வெளிவட்டச்சாலை முழுமை பெறாத நிலையில் அங்கு 4 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவற்றையும் சேர்த்தால் சென்னை பெருநகருக்குள் நுழைவதற்கான சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 13 ஆக அதிகரிக்கிறது. சென்னை பெருநகருக்குள் எந்த பக்கம் இருந்து நுழைந்தாலும் சுங்கக்கட்டணம் செலுத்திய ஆகவேண்டும் என்ற நிலை உள்ளது. அந்த அளவுக்கு சாலை அமைத்த நிறுவனங்கள் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருகின்றன. போரூர், கிழக்கு கடற்கரைச்சாலை, ராஜீவகாந்தி சாலை என மாநகரை சுற்றிலும் தற்போது 9 சுங்கச்சாவடிகள் உள்ளன. அவற்றில் சில நகர் பகுதிக்குள் செயல்படுவதற்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கெடுபிடி வசூல் நின்றபாடில்லை.

இந்த வரிசையில் 63 கிலோமீட்டர் தூரம் கொண்ட வண்டலூர்-மீஞ்சூர் இடையிலான வெளிவட்ட சாலையும் சேர்ந்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து நெரிசலுக்கு தேர்வாக கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் மதிப்பு 2,160 கோடி ரூபாயாகும். சாலி அமைக்கும் பணி நிறைவடையாத நிலையில் 4 இடங்களில் சுங்கச்சாவடி அமைப்பதில் தமிழக சாலைகள் மேம்பாட்டு நிறுவனம் தீவிரம் காட்டுகிறது. முடிச்சூர் அருகே வரதராஜபுரம், கொளப்பஞ்சேரி, ஆலமேடு, சின்னமுல்லைவாயில் ஆகிய இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள் அமைய உள்ளன.  இதற்கிடையே எண்ணூர்-மாமல்லபுரம் இடையே 133.65 கிலோமீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது.

எண்ணூரில் துவங்கி தச்சூர், தாமரைப்பாக்கம், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சிங்கபெருமாள்கோவில் வழியாக மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் முடிவடையும். 5 கட்டங்கள் கொண்ட இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய், முதல்கட்ட பணி 2,470 கோடி மதிப்பில் எண்ணூர்-தடச்சூர் இடையே 25 கிலோமீட்டர் தூரம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு ஜப்பான் நிதியுதவி அளிக்கிறது. இதிலும் எத்தனை சுங்கச்சாவடிகள் அமையப்போகிறது என வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.    


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

 • syriaairstrike

  சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

 • boliviafire

  பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

 • russiatomatofight

  ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

 • yamunariver20

  கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்