SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து ஆய்வு: நாசா

2019-01-21@ 11:49:58

வாஷிங்டன்: சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து ஆய்வு நடத்த நாசா திட்டமிட்டுள்ளது. சந்திரனில் சீனா தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளது. சந்திரனின் இருட்டு பகுதியில் ஆராய்ச்சி செய்ய ‘சாங்-இ4’ என்ற விண்கலத்தை அங்கு அனுப்பியுள்ளது. அந்த விண்கலம் இம்மாத தொடக்கத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவும் சந்திரனில் மீண்டும் தனது ஆய்வை தொடர ஆர்வமாக உள்ளது. அதை சீனாவுடன் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளது.

அதற்கான ஆலோசனையை சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் சமீபத்தில் ‘நாசா’ நடத்தியது. அப்போது சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பூமியில் இருந்து வேறு கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னோடியாக எடுத்த ஆண்டு அதாவது 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் சந்திரனுக்கு ‘ரோபோ’வை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்