SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2020 மார்ச் மாதத்துக்குள் 100 சதவீதம் கங்கை நதி தூய்மை: மத்திய மந்திரி நிதின் கட்காரி

2019-01-21@ 11:04:12

நாக்பூர்: 2020 மார்ச் மாதத்துக்குள் 100 சதவீதம் கங்கை நதி தூய்மை ஆகும் என்ற நம்பிக்கை உள்ளதாக மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார். மராட்டிய மாநிலம் நாக்பூரில் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக ரூ.26 ஆயிரம் கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது என கூட்டத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார். இதுவரை கங்கையை சுத்தம் செய்யும் பணி 10 சதவீதம் மட்டுமே நடந்து உள்ளது எனவும் கூறினார்.

இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 30 முதல் 40 சதவீதம் சுத்தம் செய்யும் பணி நிறைவடையும் எனவும் கூறினார். மேலும் 2020 மார்ச் மாதத்துக்குள் 100 சதவீதம் கங்கை நதி தூய்மை ஆகும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் கூறினார். கங்கை மட்டுமன்றி அதன் கிளை நதிகளையும் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்