SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆஜர்

2019-01-21@ 10:54:07

சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார். ஏற்கனவே 3 முறை சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகாத நிலையில் தற்போது விஜயபாஸ்கர் ஆணையத்தில் ஆஜராகி உள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அரசு சார்பில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு தரப்பினரை விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இதில் ஏற்கெனவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது சகோதரர் ஜெ.தீபக் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி, சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. மேலும் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்போலோ மருத்துவமனையில், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஏற்கனவே 3 முறை சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகாத நிலையில் விஜயபாஸ்கர் ஆணையத்தில் இன்று ஆஜராகி உள்ளார். ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்வது தொடர்பாகவும், ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆலோசித்திருக்கலாம் என்ற அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்த கடந்த டிசம்பர் 18-ம் தேதி ஆஜராக ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு ஆணையத்திற்கு கடிதம்  எழுதியிருந்தார். தொடர்ந்து ஜனவரி 8-ம் தேதி விஜயபாஸ்கர் ஆஜராக ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பியது. இதையடுத்து இன்று அவர் ஆஜராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்