SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதம் சரிவு

2019-01-21@ 10:30:30

பீஜிங்: கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2018-ஆம் ஆண்டில் 6.6 சதவீதம் சரிவடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இது குறித்து சீனா வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையில், 2018 ம் ஆண்டின் இறுதி காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏஎப்பி நிறுவனம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த புள்ளி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் 2-வது பொருளாதார நாடான சீனாவின் வளர்ச்சி கடந்த ஆண்டில் 6.6 சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான கால அளவில் மட்டும் 6.4 சதவீதம் சரிந்துள்ளதாகவும் சீன தேசிய புள்ளியியல் கழகம் தெரிவித்துள்ளது. ஆனால் 2018 ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை 6.5 சதவீதம் அளவிற்கு உயர்த்த சீன அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. அமெரிக்கா உடனான வர்த்தக போரே சீனாவின் பொருளாதார வளர்ச்சி சரிவடைந்துள்ளதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்