ஏலத்திற்கு வருகிறது பிரதமர் மோடியின் பரிசுப்பொருட்கள்
2019-01-21@ 10:13:12

டெல்லி: பிரதமர் மோடியின் பரிசுப்பொருட்களை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தலைப்பாகை, சால்வை, ஓவியங்கள், புகைப்படங்கள் என மோடிக்கு வழங்கப்பட்ட 1800க்கும் மேற்பட்ட பரிசுப்பொருட்கள், டெல்லியில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவற்றை இம்மாதம் ஏலம்விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார். ஏலத்தின்மூலம் கிடைக்கும் தொகை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் என அவர் கூறினார்.
இந்த பரிசுப்பொருட்கள் விரைவில் இணையதளத்தில் காட்சிப்படுத்தப்படும் என்றும் நேரடியாகவும் இணையதளம் மூலமும் ஏலம்விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஏலம் நேரடியாக 2 நாட்களும், இணையதளத்தில் 3 நாட்களும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான பொருட்களுக்கு அடிப்படை விலையாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த 2015-ம் ஆண்டும் மோடியின் பரிசுப்பொருட்கள் ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுங்கள் : ராணுவத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு
ஐசிஐசிஐ வங்கியில் மோசடி விவகாரம் : சந்தா கோச்சாருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ்
உத்திரபிரதேசத்தில் தனியார் அடகு கடையில் ரூ.4.5 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை
நாடு முழுவதும் உள்ள காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
சத்தீஸ்கரில் வாகன சோதனையில் பிடிப்பட்டது ரூ.1.70 கோடி ஹவாலா பணம் : 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தேஜசுக்கு இறுதி ஒப்புதல்
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்
கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு
உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்
மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி