வங்கிக்கடன் மோசடி தொடர்பான வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை திட்டம்
2019-01-21@ 10:03:33

டெல்லி: வங்கிக்கடன் மோசடி தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வர லண்டன் நீதிமன்றத்தில் சட்டரீதியான போராட்டம் நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தில் அடுத்த சுற்று விசாரணை தொடங்க உள்ள நிலையில், விஜய் மல்லையாவின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விஜய் மல்லையாவின் நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் இந்த சொத்துகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடும் என்றும், அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மல்லையாவுக்கு சொந்தமான சொத்துகள் மற்றும் அதில் பங்கு வகிக்கும் நபர்கள் குறித்த பட்டியல் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் அமலாக்கத்துறை தவறுதலாக மல்லையாவில் இரு நிறுவனங்களுக்கு சொந்தமான 17 சதவீதம் பங்குகளை முடக்கி உள்ளதாகவும், இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் கூறி மல்லையாவின் உறவினர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதனால் இந்த மனு மீது கோர்ட் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன் மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்து, ஏலம் விட திட்டமிடப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற காரணத்தை கூறி விஜய் மல்லையா லண்டனிலேயே தங்கி விட முடியாது என லண்டன் கோர்ட்டும் விஜய் மல்லையா மீது அதிருப்தி தெரிவித்துள்ளது. இதனால் விரைவில் அவரை இந்தியா அழைத்து வர லண்டன் கோர்ட் அனுமதி அளிக்கும் என நம்பப்படுகிறது.
மேலும் செய்திகள்
பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுங்கள் : ராணுவத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு
ஐசிஐசிஐ வங்கியில் மோசடி விவகாரம் : சந்தா கோச்சாருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ்
உத்திரபிரதேசத்தில் தனியார் அடகு கடையில் ரூ.4.5 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை
நாடு முழுவதும் உள்ள காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
சத்தீஸ்கரில் வாகன சோதனையில் பிடிப்பட்டது ரூ.1.70 கோடி ஹவாலா பணம் : 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தேஜசுக்கு இறுதி ஒப்புதல்
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்
கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு
உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்
மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி