விடுதலை செய்ய வலியுறுத்தி வேலூர் சிறையில் முருகன் உண்ணாவிரதம்
2019-01-21@ 00:47:32

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.இந்நிலையில், விடுதலை செய்யக்கோரி நேற்று முன்தினம் மதியமே முருகன் உண்ணாவிரதத்தை தொடங்கினார். தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இதையடுத்து காலை 11 மணியளவில் சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முருகனின் கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்பதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து முருகன், உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
மேலும் செய்திகள்
குமரி-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை: ரயில்வே இடத்தில் இருந்த 62 வீடுகள் அகற்றம்
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் காயம்
ஹெச்ஐவி பாதித்த குழந்தை சிகிச்சையில் அலட்சியம்? கோவை அரசு மருத்துவமனை மீது பெற்றோர் புகார்
சிவகாசியில் பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து 7 பேர் குழு ஆய்வு
செவல்பட்டியில் நூலக கட்டிடத்தில் இயங்கும் பால்வாடி : இடவசதியின்றி குழந்தைகள் தவிப்பு
புதுகை அருகே மாத்தூரில் விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு கம்பெனிகள் மூடல் : 10 ஆயிரம் பேர் வேலையிழப்பு
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்
கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு
உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்
மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி