SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல்வர் பதவியை பிடிப்பதற்கு கோட்டையில் சிறப்பு யாகமா?: ஓ.பன்னீர்செல்வத்துக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

2019-01-21@ 00:30:52

சென்னை: முதல்வர் பதவியை பிடிக்க வேண்டும் என்பதால் தலைமை செயலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தினாரா என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு, மணமக்களை  வாழ்த்தினார். விழாவில், மு.க.ஸ்டாலின் பேசியதாவது:இன்றைக்கு உங்களிடத்தில் சில முக்கியமான செய்திகளை நான் சொல்லப்போகின்றேன். முதலமைச்சர் பதவி காலியாக போகிறது. முதலமைச்சர் எடப்பாடி விரைவில் சிறைக்கு செல்ல  போகிறார். ஜெயலலிதாவும், சசிகலாவும் ஊழல் குற்றச்சாட்டிற்கு சிறைக்கு சென்றார்கள். ஆனால் இப்போது இருக்கக்கூடிய முதலமைச்சர் கொலை குற்றவாளியாக சிறைக்குச் செல்ல போகின்றார்.அப்படித்தான் இப்போது செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது. இதை நான் சொல்கின்ற காரணத்தால், எடப்பாடி பழனிசாமி என் மீது வழக்குப் போடலாம். ஏதோ பொத்தாம் பொதுவாக நான்  பேசுவதாக நீங்கள் நினைத்துவிடக்கூடாது எதையும் ஆதாரத்தோடு தான் பேசுவேன்.

கடந்த ஒரு வார காலமாக நாட்டில் நடந்து கொண்டிருக்கக்கூடிய செய்திகள் எல்லாம் உங்களுக்கு தெரியும். ஜெயலலிதா இறந்து ஒரு பத்து நாட்களுக்குள் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றார். சில நாட்களில் ஒரு செய்தி வந்தது. கொடநாடு பங்களாவில் நுழைந்த திருடர்கள், தடுக்க  முயன்ற வாட்ச்மேனை அடித்து கொன்று விட்டு, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர். ஆனால், அங்கிருந்த விலை உயர்ந்த கடிகாரம், இரண்டு மூன்று பொம்மைகள் காணாமல் போயின என்று ஒரு செய்தியை திட்டமிட்டு பரப்பினார்கள். ஆனால், இப்போதுதான் உண்மை  வெளிவந்துள்ளது. ஜெயலலிதா இறந்தவுடன் அவர் வைத்திருந்த சில ஆவணங்கள், வீடியோ எடுத்து கம்ப்யூட்டரில், பென்டிரைவில் அதை பதிவு செய்து வைத்திருந்தவை எல்லாம் காணாமல் போயிருக்கிறது.  அந்த மர்மத்தில் முதலமைச்சர் பழனிசாமியும் இடம் பெற்றிருக்கிறார். சசிகலாவும், தினகரனும் இடம் பெற்றிருக்கிறார்கள், ஓபிஎஸ் இடம்பெற்றிருக்கிறார், இப்படி எல்லோரும்  அதில் இடம் பெற்று இருக்கிறார்கள்.ஐ.டி. ரெய்டு அல்லது சிபிஐ ரெய்டு வந்தால் அதை எடுத்து போய் விடுவார்கள், அதனால் நமக்கு ஆபத்து வந்து விடும் என்பதால், உடனடியாக அதை எப்படியாவது அங்கிருந்து எடுத்து விட வேண்டும்  என்று முடிவு செய்து, முதலமைச்சராக எடப்பாடி இருந்தால் தான் செய்ய முடியும் என்று முடிவு செய்தார்கள்.
அதன்படி, சசிகலா சிறைக்கு போவதற்கு முன்பு கூவத்தூரில் முடிவு செய்தபடி, எடப்பாடி முதலமைச்சர் ஆனார். பின்னர், அந்த காரியத்தை செய்தார். இதெல்லாம் நான் சொல்லவில்லை.  மிகத்தெளிவாக மேத்யூ என்கின்ற ஒரு ஆசிரியர், தெஹல்கா என்கின்ற ஒரு நிறுவனத்தின் முன்னாள் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

நியாயமாக எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துவிட்டு இந்த விசாரணைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டிருந்தால் உள்ளபடியே நாம் அவரை பாராட்டலாம். இந்த வழக்கில் எல்லாம்  முடிகின்ற காலத்தில் நிச்சயமாக எடப்பாடி உள்ளே சென்றுவிடுவார்.
இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (நேற்று) அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணி வரை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு யாகத்தை நடத்தி இருக்கிறார். முதல்வர் சிறைக்கு ெசன்றால், அந்த பதவியை பிடிப்பதற்காக இந்த யாகத்தை ஓ.பி.எஸ். நடத்தியிருக்கிறார். ஒன்று முதலமைச்சராக வேண்டும் என்று ஆசைப்பட்டு நடத்தியிருக்கலாம், இல்லையென்றால் கோப்புகளை எரிப்பதற்காக யாகம் நடத்தியிருக்கலாம். கோட்டையில் யாகம் நடத்திய  ஓ.பி.எஸ். இதற்குப் பதில் சொல்லியே தீரவேண்டும்.
கோட்டையில் எப்படி யாகம் நடத்த முடியும்? கோட்டை என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா?, அது எல்லா மதத்திற்கும் சொந்தமானது. அரசாங்கத்திற்கு உரிய இடம். இங்கு யாகம் நடத்துவதற்கு  என்ன உரிமை இருக்கிறது. இவ்வாறு அவர் ேபசினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • china23

  சீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்

 • 23-08-2019

  23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mamtateashop

  மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

 • chidambaramprotest

  ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

 • delhiprotest22

  காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்