SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்ச்சைக்குரிய கருத்து வருத்தம் தெரிவித்து அஜித் பவார் உண்ணாவிரதம

2013-04-15@ 01:00:05

சத்தாரா (மகாராஷ்டிரா) : மகாராஷ்டிராவின் வறட்சி நிலைமை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த துணை முதல்வர் அஜித் பவார், தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து நேற்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தார். மகாராஷ்டிராவின் வறட்சி குறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வர் அஜித் பவார், ‘‘அணைகளில் தண்ணீர் இல்லாவிட்டால் நாங்கள் சிறுநீர் கழிக்கவா முடியும்? என்று கூறினார். அவருடைய இந்த பேச்சு கடும் கண்டனம் எழுந்ததால், சட்டப்பேரவையில் அஜித் பவார் மன்னிப்பு கேட்டார். இதனை ஏற்காத எதிர்க்கட்சிகள் அஜித் பவார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி வருகின்றன.

இந்த நிலையில், அஜித் பவார் நேற்று திடீரென மகாராஷ்டிரா தலைவர் யஷ்வந்த்ராவ் சவான் சமாதியில் தமது தவறுக்கு வருத்தம் தெரிவித்து ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தார். அஜித் பவாரின் இந்த முயற்சியை பாராட்டிய தேசியவாத காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக், “அஜித் பவார் பெரிய மனதுடன் தன் தவறை ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் பிரச்னையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும்Ó என்றார்.

how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what
drug coupon card prescription coupons drug discount coupons
abortion pill procedures farsettiarte.it having an abortion
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்