SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இதையும் கவனியுங்க

2019-01-21@ 00:13:55

தமிழகத்தில் ஏழை, நடுத்தர மக்களே அரசு பஸ்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். தனியார் வசமிருந்த போக்குவரத்து சேவை தமிழகத்தில் கடந்த 1972ம் ஆண்டு  அரசுடமையாக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு தற்போது சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், விழுப்புரம், நெல்லை உள்ளிட்ட 8 இடங்களில் கோட்டங்கள் உள்ளன. இதன் மூலமாக  தினந்தோறும், 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி இச்சேவையை 1.40  லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.அரசு போக்குவரத்து கழகத்தின் வசதிகளை அதிகரிக்கும் வகையில் ஏற்கனவே விரைவுப்பஸ்களில் செல்லும் பயணிகளுக்கு 10 ரூபாய் ‘வாட்டர் பாட்டில்’  வழங்கப்படுகிறது. ஆம்னி பஸ்களில் மட்டுமே இருந்த இந்த வசதிகள் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களிலும் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த  சேவையை அனைத்து அரசு பஸ்களிலும் விரிவுப்படுத்த போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. வரும் கோடை காலத்திற்குள் பயணிகளுக்கு இந்த சேவை கிடைக்கும் எனத் தெரிகிறது.இச்சேவையை வரவேற்ற பயணிகளே அரசு பஸ்களின் அவலங்கள் குறித்தும் பல கேள்விகளை எழுப்புகின்றனர். கோடையில் தண்ணீர் தேவை என்றாலும், வருவாய் அடிப்படையிலான  திட்டங்களை மட்டுமே அரசு ஊக்குவிக்கக் கூடாது என்பது பயணிகளின் கருத்தாகும். குறிப்பாக தமிழகத்தில் 70 சதவீதம் பஸ்கள் ஓட்டை, உடைசலாக இயக்கப்படுகின்றன.  மாநகரங்களில் இயக்கப்படும் சில பஸ்கள் மட்டுமே புதிய தோற்றத்தோடு உலா வருகின்றன. மற்ற பஸ்கள் சுத்தமான இருக்கைகள் இன்றி, மேற்கூரைகள் தரமற்று காணப்படுகின்றன. பல  பஸ்களில் மழை பெய்தால் ஒழுகுவது கண்கூடு.

பட்டை, கியர், பேட்டரி, டயர் உள்ளிட்ட உதிரிபாகங்கள் தேய்ந்து சில பஸ்கள் அடிக்கடி பிரேக் டவுன் ஆகி நிற்கின்றன. அரசு பஸ்களை டீசல் சிக்கனத்தோடு டிரைவர்கள் அரும்பாடுபட்டு இயக்கி  வருகின்றனர். அல்ட்ரா டீலக்ஸ், ஹைவே ரைடர், என்ட் டூ என்ட் என அரசு பஸ்களின் பெயர்களில் இருக்கும் மினுமினுப்பு பயணத்தில் இருக்காது. தமிழக அரசு போர்கால அடிப்படையில் அரசு  பஸ்களை சீரமைப்பதே பயணங்களுக்கு நல்லது. புதிய பஸ்களை அறிமுகம் செய்கிறோம் எனக்கூறிக் கொண்டு மாநகரங்களுக்கு மட்டுமே அவற்றை இயக்குவதும் நல்லதல்ல. அதிலும்  முதல்வரின் மாவட்டமான சேலம் மாவட்டத்திற்கு அதிகப்படியான புதிய பஸ்கள் ஒதுக்கப்படுவதும் பயணிகள் மத்தியில் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.அரசு பஸ்களில் ₹10 தண்ணீர் பாட்டில் திட்டம் கண்டக்டர்களுக்கும் சிரமங்களை ஏற்படுத்தவே செய்யும். ஏனெனில் பல கண்டக்டர்கள் பயணிகள் கூட்டத்திற்குள் முண்டியடித்து  டிக்கெட் போடவே மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்குகின்றனர். இதில் தண்ணீர் பாட்டில்களை வேறு வியாபாரி போல கூவி, கூவி விற்பது சிரமத்தையே அளிக்கும். முதலில் நல்ல தரமான, கூடுதல்  பஸ்களின் இயக்கத்திற்கு அரசு உத்தரவாதம் அளித்துவிட்டு, இத்தகைய தண்ணீர் பாட்டில்களை விற்க முன்வரலாம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

 • syriaairstrike

  சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

 • boliviafire

  பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

 • russiatomatofight

  ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

 • yamunariver20

  கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்