SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொகுசு விடுதியில் தங்கியிருந்தபோது காங். எம்எல்ஏ.க்கள் கைகலப்பு: ஒரு எம்எல்ஏ படுகாயம்; கர்நாடகாவில் பரபரப்பு

2019-01-21@ 00:11:17

பெங்களூரு: கர்நாடகாவில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்ட காங்கிரஸ்  எம்எல்ஏ.க்கள், நள்ளிரவு மது விருந்தின்போது கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் எம்எல்ஏ கணேஷ்  பலமாக தாக்கியதால் படுகாயம் அடைந்த எம்எல்ஏ ஆனந்த்சிங், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் காங்கிரசில் பெரும் பரபரப்பையும்,  அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என மஜத-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும், கூட்டணி ஆட்சியை வீழ்த்தியே தீருவோம் என பாஜ.வினரும் மேற்ெகாண்ட அரசியல்  நாடகம் காரணமாக கடந்த சில நாட்களாக மாநில அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் விதானசவுதாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் அனைவரும்  ராம்நகர் மாவட்டம், பிடதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள ‘ஈகிள்டன் ரிசார்ட்’ என்ற சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அன்று மாலை காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் எம்எல்ஏ.க்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு அனைத்து எம்எல்ஏ.க்களும் அங்கேயே தங்க வைக்கப்பட்டனர்.  குறிப்பாக, பல்லாரியை சேர்ந்த எம்எல்ஏ.க்கள் பீமா நாயக், கணேஷ், ஆனந்த்சிங், துகாராம் ஆகிய நான்கு பேரும் சொகுசு அறையில் தங்கினர்.

 அன்றைய தினம் இரவு மது விருந்து அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, மது விருந்து உச்சக்கட்டத்தை அடைந்ததாகவும், அந்த நேரத்தில் எம்எல்ஏ.க்கள் கணேஷ், பீமாநாயக்  ஆகியோர், ஆனந்த் சிங்கை பார்த்து, ‘‘பாஜவுக்கு செல்ல திட்டமிட்டுவிட்டு, தற்போது இங்கு வந்து அமர்ந்து இருக்கிறாயா?’’ என்று கேட்டு பிரச்னை செய்ததாக தெரிகிறது. இதனால், மூன்று பேர்  இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திடீரென எம்எல்ஏ. கணேஷ் ஆவேசம் அடைந்து  ஆனந்த்சிங்கை பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. அதிகாலை 3 மணியளவில் இந்த  சம்பவம் நடந்ததாக தெரிகிறது.   படுகாயம் அடைந்த ஆனந்த்சிங் நேற்று காலை பெங்களூருவில் உள்ள அப்போலோ பிரபல தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி அனுமதிக்கப்பட்டார்.   டாக்டர்கள் அவரை பரிசோதித்ததில், அவருடைய இதயம் நல்ல முறையில் இயங்குவதாகவும், இதயத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் உறுதி செய்தனர். ஆனால், ஆனந்த் சிங்கின் வலது  பக்க கண் புருவம் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இருப்பதாகவும், வயிற்று பகுதியில் உள்காயம் ஏற்பட்டு அம்பலப்படுத்திய உறவினர் எம்எல்ஏ ஆனந்த்சிங்கை பார்க்க அவரது உறவினர் சந்தோஷ் என்பவர் வந்தார். அவரை நிருபர்கள் தொடர்பு கொண்டு சந்தேகங்களை ேகட்டனர். அப்போது ஆரம்பத்தில் ஆனந்த்சிங் ெநஞ்சு வலி  காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறிய அவர், ஆனந்த் சிங்கின் கண் புருவம் மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டார். இறுதியாக தட்டு  தடுமாறி ஆனந்த் சிங் தாக்கப்பட்டார் என்பதை உறுதிப்படுத்தினார்.
இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.  

 மேற்கண்ட பாதிப்புக்கு அப்போலோ மருத்துவமனையின் மருத்துவ வல்லுனர் டாக்டர் ரவி மோகன்ராவ் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார். கண் புருவம் மற்றும் வயிற்று பகுதியில் பாதிப்பு  இருப்பதால், 24 மணி நேர சிகிச்சைக்கு பின்னர் தான் வீட்டுக்கு அனுப்ப முடியும் என ஆலோசனை கூறியிருப்பதால் எம்எல்ஏ, ஆனந்த்சிங் மருந்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வருவதாக கூறப்படுகிறது. அவரது முகத்தில் 12 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் இடையே நடந்த இந்த கைகலப்பால் காங்கிரசில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  ஆனந்த்சிங் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு: எம்எல்ஏ ஆனந்த்சிங் தாக்கப்பட்டது  குறித்து அவரது மனைவி லட்சுமிசிங் கூறுகையில்: “எனது கணவர் தாக்கப்பட்டாரா? இல்லையா? என்பது சரியாக தெரியவில்லை. ஊடகத்தை பார்த்தப் பிறகுதான் அவர் தாக்கப்பட்டது  தெரியவந்தது. ஒருவேளை எம்எல்ஏ கணேஷ் என் கணவரை தாக்கியதாக தெரியவந்தால், அவரை விடமாட்டேன்; நடவடிக்கை எடுப்பேன். நேற்று ஈகிள்டன் ரிசார்ட்டில் இருந்து என்னுடன்  தொலைபேசியில் என் கணவர் தொடர்பு ெகாண்டு பேசினார். அப்போது, நாள் முழுவதும் ரிசார்ட்டில் என்ன நடந்தது என்பதை பகிர்ந்து கொண்டார். பிறகு, தூங்கப் போவதாக குட்நைட்  சொல்லிவிட்டு சென்றார். இன்று (நேற்று) காலையில் நான் மும்பையில் நடந்த  எங்கள் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அப்போது, ஆனந்த்சிங் தாக்கப்பட்ட தகவலை அறிந்து பதறினேன். உடனே, காங்கிரஸ் தலைவர்களை தொடர்பு  கொண்டு கேட்டபோது, யாருமே சரியான தகவல் தெரிவிக்கவில்லை. அவர் நன்றாக இருக்கிறார் என்றும், பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் மழுப்பலான கூறினர்” என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

 • nigeriaaa_twins1

  இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • russia_anumin111

  ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

 • largestpotato

  உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

 • marsgobi_desert1

  செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்