SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இணையதளத்தில் அவதூறான பதிவு: நடிகை ராக்கி சாவந்த் காதலனுக்கு தர்ம அடி

2019-01-20@ 03:17:56

சென்னை: தமிழில் கம்பீரம், என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடல் காட்சிக்கு நடனம் ஆடியவர், ராக்கி சாவந்த். தவிர கன்னடம், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மராத்தி, ஒடியா ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு நடிகர் நானா படேகர் மீது மீடூ புகார் கூறிய நடிகை தனு தத்தாவை கடுமையாக விமர்சித்த ராக்கி சாவந்த், தன்னை அவர் லெஸ்பியன் உறவுக்கு பயன்படுத்தியதாக புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். இந்த சர்ச்சை முடிவதற்குள், குத்துச்சண்டை மேடை ஒன்றில், வெளிநாட்டு பெண் பயில்வானிடம் குத்து வாங்கி, அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.  இதையடுத்து, இந்தி காமெடி நடிகர் தீபக் கலால் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாக பேட்டி கொடுத்தார். கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளிநாட்டில் திருமணம் நடக்கும் என்றும், அதில் பாலிவுட் நடிகர்கள் பங்கேற்பதாகவும் அறிவித்திருந்த நிலையில், திடீரென்று தங்கள் திருமணம் ரத்து செய்யப்பட்டதாக இணையதள பக்கத்தில் தெரிவித்தார் ராக்கி சாவந்த்.அதைக்கண்டு காதலன் தீபக் கலால் கதறி அழுதார்.

சமீபத்தில் மும்பையிலுள்ள ஒரு நெடுஞ்சாலையில் தீபக் கலால் காரில் சென்றபோது, திடீரென்று அவரை இடைமறித்த ஒருவர், கீழே இறங்கி வரச் சொல்லி கூச்சலிட்டார். ‘’இணையதள பக்கத்தில் நீ அவதூறான விதத்தில் பதிவுகளும், வீடியோவும் வெளியிடுவது ஏன்?’’ என்று கேட்ட அவர், சட்டென்று தீபக் கலாலுக்கு தர்ம அடி கொடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ‘’இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்’’ என்று அவரிடம் தீபக் கலால் கெஞ்சிக் கதறினார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. இதுகுறித்து ராக்கி சாவந்த் பதிலளிக்காமல் மவுனமாக இருக்கிறார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • africaslavarieshouse

  1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

 • southwestchinaflo

  தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

 • turkeyprotest

  துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்