SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எங்கே போகிறோம்?

2019-01-20@ 02:24:39

தமிழகத்தில் 4,800க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தரும் துறைகளில் டாஸ்மாக் முதலிடத்தில் உள்ளது. சாதாரண நாட்களில் ரூ.75 கோடி முதல் ரூ.85 கோடி வரையிலும், விடுமுறை தினங்களில் ரூ.90 கோடி வரையிலும் மது விற்பனையாகிறது.  ஆனால், இந்த விற்பனை தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அதிகரிக்கும். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது 4 நாட்கள் விடுமுறையில் ரூ.602 கோடிக்கு மதுவிற்பனை நடந்தது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை 5 நாட்கள் விடுமுறையில் ரூ.735 கோடிக்கு மதுவிற்பனையாகி உள்ளது.

‘கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறையில் மது விற்பனை அதிகரித்துள்ளது. ரூ.750 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இதை எட்டும் வகையில், ரூ.735 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. மதுரை மண்டலத்தில்தான் அதிகமாக மதுவிற்பனையாகி உள்ளது.
நாட்டிலேயே மது விற்பனை மூலம் வருவாய் ஈட்டுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2017-18ம் நிதியாண்டில் 26,794 கோடி வருவாய்
ஈட்டியுள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் அரியானா, மகாராஷ்டிராவும் இடம்பெற்றுள்ளன.  மது விற்பனையில் முதலிடம் பெற்றுள்ளது என்று சொல்லிக் கொள்வதில் பெருமை எதுவும் இல்லை. நாட்டில் பீகார், குஜராத் உள்பட 7 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசத்தில் லட்சத்தீவுகளிலும் மதுவிலக்கு அமலில் உள்ளது. பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்திய பின்னர் கொலை, கொள்ளை, வன்முறைகள், சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட
வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சட்டப் பேரவை தேர்தலின்போது, வலுவாக இருந்தது.

ஆனால், தேர்தலுக்கு பின்னர் அந்த கோரிக்கை நீர்த்துபோனது. அதன் விளைவு தமிழகத்தில் மது குடிப்போர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. மாநிலத்தில் 50 வயதுகளில் இறப்போரின் எண்ணிக்கை சமீப ஆண்டுகாலமாக அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கு பிரதான காரணமாக குடிப்பழக்கம்தான் என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.
மதுவிலக்கு அமல்படுத்தவில்லை என்றாலும் மதுவை ‘ஹெல்த்டிரிங்க்’ ஆக மாற்றலாம்.

உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்காத வகையில் மதுபானம் தயாரிப்பு மற்றும் விற்பனையை அரசு உறுதி செய்யலாம். மது குடிப்போருக்கு ஏற்படும் உடல் நலக்குறைபாடுகளுக்கு அவர்கள் சிகிச்சை பெறும் வகையில் காப்பீடு வசதி செய்து கொடுக்கலாம் என்று மதுகுடிப்போர் கூறுகின்றனர். இவர்களின் கோரிக்கையில் பொருள் உள்ளது. வருவாய் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு மதுவிற்பனையை இலக்கு நிர்ணயம் செய்து விற்பது என்பது ஏற்புடைய செயல் அல்ல என்று சமூக ஆர்வலர்கள் கூறுவதில் அர்த்தம் உள்ளது. சமுதாயத்தில் இளைஞர்களை மரணக்குழிக்குள் தள்ளும் இந்த செயலை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டால் சரி.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்