SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அண்ணா பல்கலையில் நாளை முதல் 3 நாளுக்கு சர்வதேச ஆவணப்பட விழா

2019-01-20@ 02:17:03

சென்னை : ஜனவரி 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்பட விழா நடைபெற உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய அரசின் கல்வியியல் தகவல் பரிமாற்றக் கூட்டமைப்பு சார்பில் 3 நாள் சர்வதேச ஆவணபட விழா நாளை தொடங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக இந்த நிகழ்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக கல்வி பல்லூடக ஆய்வு மையத்தின் இயக்குனர் கவுரி கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள 3 சர்வதேச ஆவணப்பட விழாவில் பங்கேற்பதற்காக தேசிய, சர்வதேச அளவில் 197 ஆவணப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னேற்றம், சுற்றுப்புறச்சூழல், மனிதஉரிமை, தூய்மை இந்தியா ஆகிய 4 பிரிவுகளில் ஆவணப்படங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல்பரிசு ₹50,000 வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் தலா 10 முதல் 15 ஆவணப்படங்கள் திரையிடப்பட உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள டிஏஜி அரங்கத்தில் நடைபெறும் 3 நாள் ஆவணப்பட விழாவை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.

இந்த ஆவணப்பட விழா 2016ம் ஆண்டு நவம்பரில் சண்டிகரில் நடந்தது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் முதல்முறையாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. ஆவணப்படங்கள் மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஜனவரி 21ம் தேதி இந்த ஆவணப்பட விழாவை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். மூன்று நாட்கள் ஆவணப்பட விழாவை தொடர்ந்து நிறைவு விழா, கருத்தரங்கம் நடைபெற உள்ளது. திரைப்பட இயக்குனர் மோகன் ராஜா இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆவணப்படங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்க உள்ளார்.இவ்வாறு அண்ணா பல்கலைக்கழக கல்வி பல்லூடக ஆய்வு மையத்தின் இயக்குனர் கவுரி கூறினார். மத்திய அரசின் கல்வியியல் தகவல் பரிமாற்றக் கூட்டமைப்பின் இயக்குனர் ஜகத் பூஷன் நட்டா, அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் உடனிருந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்