தேசிய சீனியர் ஹாக்கி பைனலில் இன்று மத்திய செயலகம்-தமிழகம் மோதல்
2019-01-20@ 02:00:15

சென்னை: தேசிய சீனியர் ஹாக்கி போட்டித் தொடரின் பைனலில் தமிழகம் - மத்திய செயலகம் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னையில் நேற்று நடந்த முதல் அரை இறுதியில் தமிழ்நாடு - சாய் அணிகள் மோதின. 9வது நிமிடத்தில் சாய் வீரர் பாபி சிங் முதல் கோல் அடிக்க, 13வது நிமிடத்தில் தமிழக வீரர் சண்முகம் கோல் போட்டு பதிலடி கொடுத்தார். தொடர்ந்து தமிழக வீரர் வினோதன், சாய் வீரர் மோகித் குமார் அடுத்தடுத்து கோல் அடிக்க, இடைவேளையின்போது இரு அணிகளும் 2-2 என சமநிலை வகித்தன. 2வது பாதியில் தமிழக வீரர் ராயர் பீல்டு கோல் போட்டு அசத்த 3-2 என முன்னிலை பெற்றது. அடுத்த நிமிடமே சாய் வீரர் ராகுல் குமார் கோல் அடிக்க மீண்டும் 3-3 என சமநிலை ஏற்பட்டது.
ஆட்டம் 3-3 என்ற கோல்கணக்கில் டிரா ஆனதை தொடர்ந்து பெனால்டி ஷூட் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் தமிழக வீரர்கள் செந்தில் நாயகம், ஆர்.மணிகண்டன், எஸ்.மணிகண்டன் ஆகியோர் கோல் அடித்தனர். சாய் சார்பில் விஷால், லோகேஷ் போரா கோல் அடிக்க, மற்ற வீரர்கள் வாய்ப்பை வீணடித்தனர். தமிழகம் 6-5 என்ற கோல் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறியது. மாலை நடந்த 2வது அரை இறுதியில் பெங்களூரு - மத்திய செயலகம் (சென்ட்ரல் செகரடேரியட்) அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிரா ஆனதை அடுத்து, பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டதில் மத்திய செயலகம் 4-3 என வென்றது (மொத்தம் 7-6). இன்று பிற்பகல் 3 மணிக்கு ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு - மத்திய செயலகம் மோதுகின்றன. காலை 7.30 மணிக்கு நடைபெற உள்ள 3, 4வது இடங்களுக்கான போட்டியில் சாய் - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
மேலும் செய்திகள்
இந்தியாவில் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்த தற்காலிக தடை விதித்தது ஒலிம்பிக் கமிட்டி
முதலமைச்சர் கோப்பை நீச்சல், ஜிம்னாஸ்டிக் போட்டி
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் முதுகுவலி காரணமாக ஹர்திக் விலகல்
குடிசை வாழ் இளைஞர்களுக்கான கால்பந்து சிக்கிம், மும்பை சாம்பியன்
புல்வாமா தாக்குதல் எதிரொலி உலக கோப்பையில் பாகிஸ்தானை வெளியேற்ற பிசிசிஐ வலியுறுத்த முடிவு
விளையாட்டு வீரர்களுக்கு உதவித் தொகை மார்ச் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
அமைதிக்கான விருது, காந்தி சிலை திறப்பு : பிரதமர் மோடியின் தென் கொரிய பயண புகைப்படங்கள்
மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி
22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்