SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாஜவுக்கு எதிரான தம்பியின் பேச்சுக்கு எச்சரிக்கை கொடுத்த தமிழிசை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

2019-01-20@ 01:26:16

‘‘பூவுக்குள் பூகம்பத்தை பாத்தீங்களா... என்று சிரித்தபடியே கேட்டார் பீட்டர் மாமா.‘‘பூகம்பத்தை விடுங்க... மக்களவை துணை சபாநாயகரையே மிரட்டும் விதத்தில் தமிழிசை ேபசி இருக்கிறார். அவர் துணை சபாநாயகர் ஆனது எப்படி என்று தெரியுமா. இப்படி சுதந்திரமாக எப்படி பேச முடிகிறது என்பதையும் புரிந்துகொள்ளட்டும் என காட்டமாக கூறியிருக்கிறார். இதைக் கேட்டு தம்பிதுரை ஆதரவாளர்கள் கொதித்துப் போயிருக்கிறார்களாம். ஜெயலலிதா வாங்கி கொடுத்த பதவி அது. பாஜ ஒன்றும் சும்மா தூக்கி கொடுத்துவிடவில்லை என்கிறார்கள். தமிழிசை ஆதரவாளர்களோ, கூட்டணி குறித்து உயர்மட்டத்தில்தான் பேசுவார்கள்... தனி நபர்கள் பேச அதிமுகவில் யாருக்கும் அதிகாரமில்லை. அதை மீறி ஒருவர் பேசுகிறார் என்றால், அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதைத்தான் எங்கள் கட்சி தலைவி செய்து இருக்கிறார் என்று கூறுகின்றனர். எப்படியோ இரண்டு கட்சிக்கும் இப்போது முட்டல் மோதல் போக்கு ஆரம்பித்திருக்கிறது’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேலூர் அதிமுக, அமமுக நிலவரம் எப்டி இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வேலூர் மாவட்டம் காட்பாடியில் பதவி கிடைக்காத நிலையில், தங்கள் சொந்த பலத்தில் நின்று வெற்றிபெற்ற விருதம்பட்டை சேர்ந்த நித்தியமானவரும், காந்தி நகரை சேர்ந்தவரும் திமுகவில் ஐக்கியமாகி விட்டாங்க. மேலும் அதிமுகவில் மாநகர பகுதியில் முக்கிய பொறுப்புகளில் பெரிய நிர்வாகிகள் யாரும் இல்லாததால், கேப்டன் இல்லாத கப்பல் போல வேலூர் மாநகர அதிமுக திணறி வருகிறது. மாநகர மாவட்ட நிர்வாகிகளை நியமித்து கட்சியை வலுப்படுத்த மாநில தலைமையும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சில நிர்வாகிகள் அணி மாறுவதற்கும் முடிவு செய்து விட்டார்களாம் என்றார் விக்கியானந்தா.

‘‘அதற்குள் இணைப்புகள் முடிந்துவிடும் போலிருக்கே....’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ம்.. தமிழக விவிஐபியின் சொந்த மாவட்டம், மாங்கனிக்கு எப்படி ேபமசானதோ, அதேபோல் ஜல்லிக்கட்டு விழாவுக்கும் பேமசு. அதிலும் இங்குள்ள ஆத்தூர் கூலமேடு ஜல்லிக்கட்டு, அலங்காநல்லூருக்கு இணையா பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வருஷம் ஜல்லிக்கட்டை ரொம்பவே சொதப்பிட்டாங்களாம் விழாக்குழுவினர். சிறந்த வீரர்களை ேதர்வு செய்து பெயரளவில் கூட ஒரு பரிசும் கொடுக்கலையாம். அதெல்லாம் சரிங்க, ெபாங்கல் பரிசுத் தொகை ₹1000 கிடைக்காமல் இருந்தா, ஜல்லிக்கட்டே நடந்திருக்காது தெரியுமா? என்று அதிர்ச்சி வைத்தியம் ெகாடுக்கிறார்–்கள் உள்ளூர் மக்கள். பொங்கலுக்கு அடுத்து வரும் மூன்றாவது நாளில் இங்கு ஜல்லிக்கட்டு நடக்கும். அப்போது கூலமேட்டில் உள்ள உள்ளூர்வாசிகள் வீட்டுக்கு தலா ₹500 வரி கொடுக்கணும். இந்த வருஷம், விவசாயம் ஒண்ணும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இதனால, அந்த தொகையை கொடுக்க முடியாதுன்னு 70 சதவீதம் பேர் சொல்லிட்டாங்க. இந்த நேரத்துல தான், ₹1000 பொங்கல் பரிசுத் தொகையை அரசு அறிவிச்சது. இதை விழாக்குழுவினரா இருக்கிற உள்ளூர் ரத்தத்தின் ரத்தங்கள் கெட்டியா பிடிச்சுகிட்டாங்க. அந்த பக்கம் ரேஷன் கடையில ஆயிரத்தை வாங்கிட்டு, இந்தப்பக்கம் திரும்பினா இரண்டு ஐநூறுல ஒண்ண, வரியா பறிச்சுக்கிட்டாங்க என்று வலியோட சொல்றாங்க கூலமேட்டுக்காரங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வேலை ஆசை காட்டி இல கட்சிக்காரங்க பணம் குவித்த விஷயத்தை கேள்விப்பட்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தமிழக நெடுஞ்சாலைத்துறையில் 188 இளநிலை தொழில் வரைஅலுவலர் பணியிடங்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியா இருக்கு. பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து விண்ணப்பம் வாங்கி 20 ஆயிரம் பேருக்கு, 2016 பிப்ரவரி மாதம், சென்னை, கிண்டி நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி மைய அலுவலகத்தில் நேர்காணல் நடந்துச்சாம்... எப்படியாவது வேலையை வாங்க வேண்டுமென ஒரே முடிவாக இருந்தவர்களிடம் இருந்து, ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலர் 5 முதல் 10 லகரம் வரை கறந்துட்டாங்க... அப்புறம் கட்சியில் ஏற்பட்ட பிரச்னைகளால், நியமனம் எதுவும் நடக்கலையாம்... இதனால 188 காலியிடங்களையும் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப கடந்த அக்.24ல் அரசாணை வெளியாகிடுச்சாம்... 188 காலியிடத்துக்கு ஆளுங்கட்சியினர் கொஞ்சம் கூட யோசிக்காமல், ‘‘கட்டாயம் போஸ்ட் வாங்கித்தரேன்’’ என்று சொல்லி, ஆயிரக்கணக்கானவர்களிடம் பணம் வசூல் செஞ்சிருக்காங்களாம்... ’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சிறைப்பறவை என்ன செய்துட்டு இருக்காங்க...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘அவர் கம்பி எண்ணல... எலக்‌ஷன்ல எத்தனை இல கட்சிக்காரங்க நம்ப கட்சிக்கு வருவாங்கனு எண்ணிட்டு இருக்காங்க... அவருடைய நேரடி ஸ்லீப்பர் செல்தான் தம்பியானவர்... பல்வேறு நபர்கள் மூலம் அவருக்கு தகவல்கள் கொண்டு சென்று சேர்த்து கொண்டு இருக்காங்க... அதை அவர் அப்படியே ஒரு வரி மாறாமல் பேசியும், ேபட்டி கொடுத்தும் வர்றாராம்... ஆனால் ஆர்கேநகர்காரர், அவரை கேலியும் கிண்டலுமாக பேசுவதெல்லாம் வெறும் நடிப்பாம்... உண்மையான ‘கீ’ சிறைப்பறவையிடம்தான் இருக்காம்... நான் ெவளியே வந்தால் நீங்கள் தான் முதல்வர் இதில் மாற்றமில்லை... நீங்கள் ஒருத்தர்தான் அக்கா மறைவுக்கு பிறகு எனக்காக எறும்புபோல சுறுசுறுப்பாக வேலை பார்த்தீங்க... அதை நான் மறக்கல... எங்க உறவினர்கள் உங்களுக்கு அடுத்தப்படியாகதான் பொறுப்பு தருவேன்... அதுவரை நீங்க பூ கட்சிக்கூட இைல சேர விடாம தடுக்க என்ன செய்யணுமோ, அதை செய்யுங்கனு தகவல் போய் இருக்காம்... அதை கனகச்சிதமாக நிறைவேற்றி வருவதாக தம்பியின் சொந்த மாவட்டத்தை சேர்ந்த இைலகட்சிக்காரங்க குற்றம்சாட்டுகிறார்கள்... அவர் கனவு பலிக்கபோவதில்லை....’’ என்று சொல்லி சிரிக்கின்றனர் இைலகட்சியினர்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • rally

  சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

 • slide

  சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

 • torch

  சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

 • statue

  சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

 • fire

  லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்