SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறுதி வாக்காளர்கள் பட்டியல் 31ம் தேதி வெளியாக வாய்ப்பு

2019-01-19@ 20:52:16

சென்னை: தமிழகம் முழுவதும் 2018ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இதன்படி தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 86 லட்சத்து 84 ஆயிரத்து 541 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2,90,48,400, பெண்கள் 2,96,30,944, இதர பிரிவினர் 5,197 பேர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது முடிவடைந்தவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை செய்ய அக்டோபர் மாதம் இறுதிவரை வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய மொத்தம் 16,21,838 பேர் விண்ணப்பத்திருந்தனர். விண்ணப்பம் செய்தவர்களின் வீடுகளுக்கு தேர்தல் அலுவலர்கள் நேரில் சென்று களஆய்வு செய்து, வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
இதையடுத்து 2019ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவித்தபடி 4ம் தேதி வெளியிடப்படவில்லை. பின்னர் 10ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுவும் தள்ளிப்போய் 21 ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் அடையாக அட்டை வைத்துள்ளதும், இறந்தவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தும் நீக்கப்படாமல் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி, போலி வாக்காளர்கள் இல்லாமல் தெளிவான பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது.
இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான வலைதளம் (ERO NET) உருவாக்கப்பட்டு, வாக்காளர்களின் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் எளிதாக கண்டறிந்து நீக்க முடியும். அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறும்போது, “இரட்டை பதிவுகளை முழுமையாக நீக்கிய பிறகே இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வருகிற 21 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும், இரட்டை பதிவுகளை நீக்கும் பணிகள் முடிவடையாததால் வருகிற 31ம் தேதிதான் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. அன்றைய தினம் தமிழகத்தில் சென்னை மாநகராட்சி அலுவலகம் மற்றும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் 2019ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் வெளியிடப்படும்” என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்