SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேசிய அளவிலான யோகா போட்டியில் ஆரணியை சேர்ந்த 2 மாணவிகள் முதலிடம்

2019-01-19@ 20:47:44

ஆரணி: தேசிய அளவிலான யோகா போட்டியில் ஆரணியை சேர்ந்த 2 தனியார் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள 2 தனியார் பள்ளிகளை சேர்ந்த 6 முதல் 8 வயது மற்றும் 12 முதல் 14 வயது வரையுள்ள மாணவிகளுக்கு, வேலூர் யோகா அசோசியேஷன் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பிக் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான யோகா போட்டிக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம், மடிகேரியில் தேசிய அளவில் நடந்த யோகா போட்டியில் வேலூர் மாவட்ட யோகா அமைப்பு நடத்திய 3வது தேசிய அளவிலான யோகாசன சாம்பியன் ஷிப்  போட்டியில் ஆரணியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 3ம் வகுப்பு மாணவி ம.சா.அல்பிசா பசூஸ் மற்றும் 7ம் வகுப்பு மாணவி வெ.பிரியதர்ஷினி ஆகியோர் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். அதேபோல் இப்போட்டியில் ஆரணி அடுத்த வஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் யமுனா, லோகேஷ், பிரசாத் ஆகியோரும் வெற்றி பெற்றனர். இந்நிலையில், முதலிடம் பிடித்த தனியார் வகுப்பு மாணவிகள் மற்றும் வெற்றி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களை யோகா ஆசிரியர்கள் எம்.ஸ்ரீதர், என்.முத்துக்குமார், அறிவொளி ஆகியோர் பாராட்டினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்