SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவகாசியில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்: அதிகாரிகள் அலட்சியம்

2019-01-19@ 20:11:33

சிவகாசி: அதிகாரிகள் அலட்சிய போக்கு காரணமாக சிவகாசி பகுதிகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தமிழகத்தில் அதிகளவில் நடந்து வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் குழந்தைகளை வைத்து பிச்சையெடுக்க வைக்கும் கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 1 முதல் 3 வயது வரை குழந்தைகளை கையேந்தி பிச்சை எடுக்க வைக்கும் செயலில் சில பெற்றோர் ஈடுபட்டு வருகின்றனர். பிச்சை எடுக்கும் நபர்களின் முகவரி கேட்டால் ஏதாவது ஒரு கிராமத்தை சொல்கின்றனர். மேலும் விசாரித்தால் நைசாக நழுவி சென்று விடுகின்றனர்.

சிவகாசியில் போக்குவரத்து சிக்னல், பஸ் ஸ்டாண்ட், பஸ் நிறுத்தம், சிவன் கோயில் முக்கு, முருகன் கோயில், காரனேசன் காலனி, சாட்சியாபுரம் போன்ற பகுதிகளில்  பிச்சையெடுப்பது அதிகரித்து வருகிறது. இவர்கள் தாங்களாகவே பிழைப்புக்காக பிச்சை எடுத்து வருகிறார்களா அல்லது பிச்சை எடுக்க வைக்கப்படுகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் பெயரளவு நடவடிக்கை காரணமாக சிவகாசியில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.  பிச்சை கொடுக்க மறுத்து செல்லும் நபர்களின் பின்னால் தொடர்ந்து செல்கின்றனர்.  வீதியில் பிச்சை எடுக்கும் குழந்தைகள் பெண்கள், முதியவர்களை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்