அரூர் அருகே முயல் விடும் விழா கோலாகலம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
2019-01-19@ 19:55:14

அரூர்: தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த குடுமியாம்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, முயல் விடும் விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு முயல் விடும் நிகழ்ச்சிக்காக, நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு சென்று, சுவாமியை வழிபட்ட பின், கோயிலில் இருந்த வலைகளை எடுத்துக் கொண்டு முயலை பிடிக்க வனப்பகுதிக்கு சென்றனர். அங்கு வலை மூலம் முயல் ஒன்றை பிடித்து வந்தனர். மாலை 6 மணிக்கு கோயில் அருகில் பெண்கள் பொங்கல் வைத்த பிறகு, சுவாமி ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தின் போது, காட்டிலிருந்து பிடித்து வந்த முயலுக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, சுவாமியை சுற்றி மூன்று முறை வலம் வந்த பிறகு சிறிது தூரம் சென்று முயலை விட்டனர். அது துள்ளி குதித்து வனப்பகுதியை நோக்கி தப்பி ஓடியது. இவ்விழாவில், அருகில் உள்ள அச்சல்வாடி, ஓடசல்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பொங்கல் முடிந்த மூன்றாவது நாள் முயல் விடும் நிகழ்ச்சி நடக்கும். வனப்பகுதியில் வலைகளை வைத்து ஒரே நாளில் முயல்களை பிடித்து வருவது இளைஞர்களுக்கு சவால் விடும் நிகழ்வாகவே கருதப்படுகிறது. கடந்த 2 தலைமுறைகளுக்கு மேலாக முயல் விடும் விழா நடந்து வருகிறது. இவ்விழாவின் போது விடப்படும் முயலை யாராவது பிடித்தால் அவர்களுக்கு ஊர் பஞ்சாயத்தில் அபராதம் விதிக்கப்படும். ஊர்மக்கள் அனைவரும் நலமாக இருக்க பாரம்பரியமாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது என்றனர்.
மேலும் செய்திகள்
தமிழகம் முழுவதும் ஆதார் சேவை மையங்கள் 3 நாட்கள் இயங்காது
ராஜாக்கமங்கலம் அருகே 84 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன: கலெக்டர் பங்கேற்பு
நொறுங்கி கிடக்கும் சாலையை கண்டுகொள்ளவில்லை சூப்பர் சாலையை சிதைத்து புது சாலையாம்!: கடையம் அருகே கிராம மக்கள் குமுறல்
கோவை மாநகரில், கடந்த 2½ மாதத்தில் ‘ஹெல்மெட்’ அணியாமல் சென்ற 27 ஆயிரத்து 772 பேர் மீது வழக்கு: ரூ. 27 லட்சத்து 77 ஆயிரம் அபராதம் வசூல்
குடந்தையில் மாசி மகம் விழா கோலாகலம் மகாமக குளத்தில் 12 சுவாமிகள் தீர்த்தவாரி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
பென்னாகரம் அருகே கடுமையான குடிநீர் தட்டுப்பாடு.. 70 ஆண்டாக அடிப்படை வசதி இல்லை என புகார்
மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்
டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது