SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

70- வது குடியரசு தினவிழா ஏற்பாடுகள் தீவிரம் : மெரினாவில் கண்கவர் ஒத்திகை நிகழ்ச்சி

2019-01-19@ 11:24:20

சென்னை : குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை சாலையில் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்றது. காமராஜர் சாலையில் காலை 7.15 மணிக்கு தொடங்கி 8.30 மணி வரை நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு நடத்திப்பார்க்கப்பட்டது. காவல்த்துறை, விமானப்படை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர்ப்படை மற்றும் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. போலீஸ் வாகன அணிவகுப்பு, பேண்டு வாத்தியங்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் கண்கவர் காலை நிகழ்ச்சிகளின் ஒத்திகையும் நடத்தப்பட்டது.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியால் கடற்கரை சாலை வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும், மயிலாப்பூர், அண்ணாசாலை வழியாக திருப்பிவிடப்பட்டன. 70-வது குடியரசு தினம் எதிர்வரும் 26-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. அந்த நாளில் சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின அணிவகுப்பு நடத்தப்படவுள்ளது. இதற்காக இன்று நடைபெற்ற ஒத்திகையை போல் திங்கட்கிழமையும் முழு அளவிலான ஒத்திகை நடத்தப்படவுள்ளது. மேலும் 24 -ம் தேதி இறுதியாக ஒத்திகை பார்க்கப்படவுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  • SriLankaHomage

    இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

  • selphiGorilla

    கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

  • QingdaoNavalParade

    சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

  • CaucaLandslide

    கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்