SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடநாடு பங்களாவில் ஆவணங்கள் மட்டுமே திருடப்பட்டது : சயன் பரபரப்பு தகவல்கள்

2019-01-19@ 08:39:31

சென்னை : கோடநாடு பங்களாவில் நுழைவதற்காக 11 பேருடன் முதல்நாள் பார்வையிட்டோம் என்று கொள்ளையடித்த சயன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து அவர் கூறியதாவது; கோடநாடு பங்களாவில் நான், கனகராஜ் உள்பட 4 பேர் மட்டுமே உள்ளே சென்றோம். அப்போது கோடநாடு காவலாளி இடைஞ்சலாக இருந்ததால் அவரை கயிற்றால் லாரியில் கட்டிவைத்துவிட்டோம். பின்னர் உள்ளே சென்றதும் ஜெயலலிதா, சசிகலா அறையை காட்டி கனகராஜ் பூட்டை உடைக்க சொன்னார்.

அப்போது நானும் மற்றவர்களும் அறையை திறந்து கொடுக்கும் வேலையை மட்டுமே செய்தோம், கனகராஜ் மட்டுமே பீரோவில் இருந்த ஆவணங்களை பலவற்றை எடுத்தார். ஆனால் பங்களாவில் இருந்து பணம், நகை எதுவும் எடுக்கவில்லை.  பீரோவில் இருந்து எடுத்த ஆவணங்களை ஒரு டிராவல் பேக்கில் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டோம்.

சேலம் சென்ற ஆவணங்கள் :

சேலம் செல்வதாக  கூறி கனகராஜ் பஸ்டாண்டில் இறங்கி கொண்டார். அப்போது அவர் எடப்பாடி பழனிசாமிக்காகதான் கொள்ளை அடிக்கிறோம் என கனகராஜ் கூறியதாக சயன் தெரிவித்துள்ளார். மேலும்  எடப்பாடி முதல்வரானதும் அவருக்கு கனகராஜ் சால்வைபோட்டு எனக்கு போட்டோ அனுப்பினார். கொள்ளையடிப்பதற்காக ரூ. 5 கோடி தருவதாக கனகராஜ் கூறியிருந்தார். ஆனால் அந்த பணம் எனக்கு வந்து சேரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டு கொலை

கோடநாடு பங்களாவில் இருந்து எடுத்த ஆவணங்கள் கிடைத்ததும், கொள்ளைக்கு உதவியவர்கள் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆவணங்களுக்காக திட்டமிட்டு தான் கொலை, கொள்ளை நடைபெற்றது. விபத்தில் நான் தப்பியிருக்காவிட்டால் இந்த உண்மைகள் வெளிவந்திருக்காது என்று தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்