SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவண்ணாமலையில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு பிரமாண்ட பெருமாள் சிலையை கொண்டு செல்ல தடைகோரி வழக்கு

2019-01-19@ 01:10:23

சென்னை: திருவண்ணாமலையில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு பிரமாண்ட பெருமாள் சிலை அரசு விதித்துள்ள நிபந்தனைகளின்படி கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு தமிழக கனிம வளத்துறைக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு ஈஜிபுரா கிராமத்தில் உள்ள கோதண்டராமர் கோயிலில் நிறுவுவதற்காக, 350 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆன பிரமாண்டமான பெருமாள் சிலை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா அருகே உள்ள கொரக்கோட்டை கிராமத்தில் வடிக்கப்பட்டது. இந்த சிலையை அங்கிருந்து கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு செல்லும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் ரத்தினம் என்பவர், ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், பிரமாண்டமான இந்த சிலையை கொண்டு செல்ல பெரிய அளவிலான டிரைலர் லாரி பயன்படுத்தப்பட்டுள்ளது. சிலை டிரைலரில் கொண்டு செல்லப்படும்போது  சாலைகள் சேதம் அடைகின்றன.

சாலையோரங்களில் உள்ள குடியிருப்புகள், கட்டிடங்கள், கடைகள் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து எந்த நடவடிக்கையும் அரசுத் தரப்பில் எடுக்கவில்லை. எனவே,   பெருமாள் சிலையை கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் ஆஜரான வக்கீல் மனோகரன்,  சிலையை கொண்டு செல்ல பல்வேறு நிபந்தனைகள் விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அரசின் அனுமதி பிப்ரவரி 4ம் தேதி வரை செல்லத்தக்கது என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு ஆதரவாக ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று மனுதாரர் தரப்பிடம் கேள்வி எழுப்பினர். மேலும், அரசாணையில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து 4 வாரங்களில் கனிம வளத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்