SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2வது திருமணத்துக்கு மறுத்த பெண் மீது ஆசிட் வீசிவிட்டு வாலிபர் தற்கொலை

2019-01-19@ 01:09:46

குலசேகரம்,: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள ஏற்றக்கோடு பறையன்கோணத்துவிளை பகுதியை சேர்ந்தவர் கிரிஜா (36). வெளிநாட்டில் கட்டிட வேலை செய்து வந்த இவரது கணவர் மணிகண்டன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.  இதனால் கிரிஜா தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வந்தார். கிரிஜாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ஜான்ரோஸ் (30) என்பவர் உதவியாக இருந்து வந்தார். இதை பயன்படுத்தி கிரிஜாவை திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவரிடம் கூறியபோது திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இருப்பினும் ஜான்ரோஸ் தொடர்ந்து அவரை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் கிரிஜா தனக்கு 2 பெண் குழந்தைகள் நலனுக்காக திருமணம் செய்யப்போவதில்லை எனக்கூறி ஜான்ரோசை ஒதுக்கியுள்ளார். என்றாலும் ஜான்ரோஸ் அவரை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார். அவரை பார்க்கும்போதெல்லாம் திருமணம் செய்யும் எண்ணத்தை கூறி வந்தார். இதனை அவர் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இதன்படி, தனது விருப்பத்தை ஏற்காத கிரிஜாவை பழிதீர்க்க முடிவு செய்து ஆசிட் வீச திட்டமிட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் கிரிஜாவிடம் சென்று தன்னை திருமணம் செய்ய கூறியுள்ளார். கிரிஜா அவரை திட்டி வெளியே விரட்டியுள்ளார். அந்தநேரத்தில், ஜான்ரோஸ் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து கிரிஜா மீது வீசினார். இதனால், வலி தாங்க முடியாமல் அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு ஆற்றூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிைடயே போலீசுக்கு பயந்து விஷ மாத்திரை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை இறந்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mallakamb_mumbai

  மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

 • varanasi_modi123

  டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

 • china_lamfesti1

  சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

 • 2mili_nall

  காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

 • pakisthan_saudi1

  பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்