SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிஎம்எஸ்-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையர் இன்று முதல் ஆய்வை தொடங்குகிறார்

2019-01-19@ 01:09:37

சென்னை: டி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை வரையிலான வழித்தடத்தில் இன்று முதல் 21ம் தேதி வரை மெட்ரோ ரயில்வே முதன்மை பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு செய்கிறார்.
சென்னையில் 45 கி.மீட்டர் தூரத்திற்கான முதல் வழித்தட திட்டத்தின் இறுதியாக டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை வரையிலான 10 கி.மீ சுரங்கப்பாதை வழித்தடத்தில் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன. இந்த வழித்தடத்தில் ஆயிரம் விளக்கு, எல்ஐசி, அரசினர் தோட்டம், சென்னை சென்ட்ரல், உயர் நீதிமன்றம், மண்ணடி ஆகிய 6 ரயில் நிலையங்கள் வர உள்ளன. வழித்தடத்தில் பணிகள் முழுமையாக முடிந்ததையடுத்து தொடர் சோதனை ஓட்டங்கள் நடந்து வந்தன.

இந்நிலையில், பொங்கல் பண்டிகை, விடுமுறை தினங்கள் முடிந்ததும் 19, 20 மற்றும் 21 ஆகிய 3 நாட்கள் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையிலான குழு ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையிலான குழு இன்று டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான வழித்தடத்தில் தன்னுடைய ஆய்வை தொடங்குகிறது.
10 கி.மீட்டர் தூரத்திலான இந்த வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டையில் இருந்து இன்று மதியம் 12 மணியளவில் ஆய்வு தொடங்குகிறது. பாதுகாப்பு ஆணையர் முன்னிலையில் மெட்ரோ ரயில் குறிப்பிட்ட வேகத்தில் இயக்கி பார்க்கப்படும். பின்னர், அவர் இந்த வழித்தடம் முழுவதிலும் ஆய்வு மேற்கொள்வார். வரும் 21ம் தேதி வரையில் முழுமையான ஆய்வை முடித்த பிறகு அவர் பெங்களூரு புறப்பட்டு செல்வார். பின்னர், பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் கிடைத்த பிறகு இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்