SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் 8 அஞ்சலகங்களில் புதிய பாஸ்போர்ட் மையங்களை 27ல் பிரதமர் தொடங்கி வைக்கிறார்? : அஞ்சலக வட்டாரங்கள் தகவல்

2019-01-19@ 01:04:56

சென்னை: தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உட்பட 8 அஞ்சலகங்களில் வரும் 27ம் தேதி புதிய பாஸ்போர்ட் சேவை மையங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக அஞ்சலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பாஸ்போர்ட் வழங்கும் வழிமுறைகளை எளிமையாக்க பல்வேறு ஒருங்கிணைந்த சேவையை மேம்படுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 2010ல் பாஸ்போர்ட் சேவா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது, 12 தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், 27ம் தேதி மதுரைக்கு வருகை தர உள்ள பிரதமர் மோடி தமிழகத்தில் உள்ள 8 அஞ்சலகங்களில் புதிய பாஸ்போர்ட் சேவை மையங்களை தொடங்கி வைக்க உள்ளதாக அஞ்சலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அஞ்சலக வட்டாரங்கள் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 2017ல் வேலூர் மற்றும் சேலம் ஆகிய இரண்டு அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டது. தற்போது, தமிழகத்தில் 4 மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களின் கீழ் 12 தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் 27ம் தேதி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். அன்றைய தினமே பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இதேபோல், காஞ்சிபுரம், திருவள்ளூர், அரக்கோணம், ஆரணி, சென்னை ஜிபிஓ (கடற்கரை ரயில் நிலைய அஞ்சலகம்), ஈரோடு, தர்மபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய 8 அஞ்சலகங்களில் காணொலி காட்சி மூலமாக புதிய பாஸ்போர்ட் சேவை மையங்களை தொடங்கி வைக்க உள்ளார். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மதுரையில் இருந்து காணொலி காட்சி மூலமாக புதிய பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளது. இந்த பாஸ்போர்ட் சேவை மையத்தில் அஞ்சலக அதிகாரி மற்றும் பாஸ்போர்ட் அதிகாரி ஆகியோர் இணைந்து பணியாற்ற உள்ளனர். இவ்வாறு தெரிவித்தன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்