SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இடைநிலை ஆசிரியர் நியமன விவகாரம் ஜாக்டோ-ஜியோ போராட்டம்

2019-01-19@ 00:56:46

சென்னை: எல்கேஜி வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது, தொடக்கப் பள்ளிகளை மேனிலைப் பள்ளிகளுடன் இணைப்பது தொடர்பான இரண்டு அரசாணைகளையும் ரத்து செய்யக்கோரி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில் நேற்று பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சென்னை மாவட்ட பிரிவின் சார்பில் நேற்று மாலை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 250 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து, சென்னை மாவட்ட பொறுப்பாளர் சாந்தகுமார் கூறியதாவது: ஜாக்டோ-ஜியோ சார்பில் 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை வலுவாக நடத்தும் வகையில் ஆயத்தமாக இன்று (நேற்று) சென்னை எழிலகத்தில் மாலை நேர பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்கின்றனர். ஜாக்டோ-ஜியோ முன்வைத்துள்ள 7 அம்ச கோரிக்கைகள் மீது 22ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. அது ஒருபுறம் இருக்க, இன்று நாங்கள் இரண்டு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம். அதில் ஒன்று, 3500 அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களை மூடுவது தொடர்பாகவும், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க உள்ளதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களை மூடிவிட்டு அங்கே எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப் போவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதில் இடைநிலை ஆசிரியர்களையும் நியமிக்க உள்ளனர். அதனால் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களை நியமிப்பதற்கு பதிலாக, மாண்டிசோரி பயிற்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்று கேட்கிறோம். அடுத்ததாக, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளுடன் தொடக்கப் பள்ளிகளை இணைக்கப் போவதாகவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு எடுத்துள்ளது. அதனால் தொடக்கக் கல்வித்துறை அழியும் நிலை ஏற்படும். எனவே, எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது, பள்ளிகளை இணைப்பது தொர்பான இரண்டு அரசாணைகளையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்