SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக சட்ட விதிகளை மாற்றியமைக்க இபிஎஸ், ஓபிஎஸ்.க்கு அதிகாரம் இல்லை : சசி தரப்பு வாதம்

2019-01-19@ 00:41:20

புதுடெல்லி: ‘அதிமுகவின் சட்ட விதிகளை மாற்றியமைக்க இபிஎஸ், ஓபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை என சசிகலா தரப்பில் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.இரட்டை இலை சின்னம், அதிமுக கட்சி ஆகியவற்றை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக தேர்தல் ஆணைய உத்தரவிற்கு எதிராக டிடிவி.தினகரன் தொடர்ந்த வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜிஎஸ்.சிஸ்தானி மற்றும் சங்கீதா டிங்கிரி சேகல் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதத்தில், “ஒரு கட்சியின் அடிப்படை விதியை மாற்ற முடியாது. மேலும் அதிமுகவை பொறுத்தமட்டில் பொதுச்செயலாளர் என்ற பதவி மட்டும்தான் உள்ளது. அதை மாற்றியோ அல்லது ரத்து செய்து விட்டு புதிய பதவியை உருவாக்கவோ இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கு அதிகாரம் கிடையாது. இதில் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது.இதை தவிர எங்களது தரப்பில் மட்டும் தேர்தல் ஆணையத்தில் சுமார் 7 லட்சத்துக்கும் மேலான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எதிர் தரப்பில் வெறும் 1.5 லட்சம் ஆவணங்கள் மட்டுமே தாக்கல் செய்தனர். அதில் பலதும் போலியானவை. இருப்பினும் இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை. அதேபோல், இந்த வழக்கில் பல்வேறு முறைகேடான சாட்சியங்கள் எங்களது தரப்பில் எடுத்து கூறப்பட்டது. அதையும் ஆணையம் கருத்தில் கொள்ளாமல் நிராகரித்து விட்டது. மேலும் அதிக அளவிலான உறுப்பினர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர். அதனால் நாங்கள்தான் உன்மையான அதிமுக. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் பலமுறை எடுத்துரைத்துள்ளோம் என வாதிட்டார். இதையடுத்து வழக்கை, வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்