SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஸ்கிரீம் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு

2019-01-19@ 00:38:20

தாம்பரம்: தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர், குண்டுமேடு பகுதியை சேர்ந்தவர் ஐசக். பெருங்களத்தூர் பேரூராட்சி 10வது வார்டு முன்னாள் திமுக கவுன்சிலர். இவரது உறவினர் ஜெபசிங் என்பவர், அதே பகுதியில் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் இந்த கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை திடீரென கடைக்குள் வீசிவிட்டு தப்பியோடினார். இதில் கடையின் முன்பகுதியில் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து கடையில் இருந்த ஊழியர்கள் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

தகவலறிந்து வந்த பீர்க்கன்காரணை போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, விசாரணை செய்தனர். பின்னர், அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனர். அதில், பெட்ரோல் குண்டை வீசியவர் ஜெபசுந்தர் என தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்