SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒருதலை காதலால் விபரீதம் பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து

2019-01-19@ 00:37:50

சென்னை: காசிமேடு சிங்கார வேலர் தோட்டத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டின் எதிரில், மதன் (24) என்பவர் வசித்து வந்தார். திருமணமானவர். இவரது வீட்டிற்கு மாணவி அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது மாணவியை ஒருதலையாக மதன் காதலித்ததாக கூறப்படுகிறது. மேலும், திருமணம் செய்யும்படியும் வற்புறுத்தி வந்துள்ளார். இதுபற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் மதனை கண்டித்துள்ளனர்.  நேற்று முன்தினம் இரவு மாணவியின் வீட்டு கதவை தட்டும் சத்தம்கேட்டது. மாணவி வெளியில் வந்து பார்த்தபோது தனது நண்பனுடன் வந்திருந்த மதன் மறைத்து வைத்து இருந்த கத்தியால் மாணவியின் தோள்பட்டையில் வெட்டிவிட்டு தப்பி சென்றார். அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். புகாரின்பேரில் காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன் மற்றும் அவரது நண்பன் சிவா (24) ஆகியோரை தேடி வருகின்றனர்.

* தண்டையார்பேட்டை நாவலர் குடியிருப்பை சேர்ந்தவர் லோகேஷ் (22). ரவுடி. இவர்,  நேற்று முன்தினம் இரவு தண்டையார்பேட்டை இளையமுதலி தெருவில் உள்ள குடிசை  மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் தனது நண்பரை பார்க்க சென்றபோது,  பைக்கில் வந்த 2 பேர் லோகேஷை வழி மறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி  விட்டு தப்பினர். ரத்தவெள்ளத்தில் கிடந்த லோகேஷை மீட்டு, ஸ்டான்லி அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து, தண்டையார்பேட்டை கைலாசம் தெருவை சேர்ந்த சரவணன் (22)  மற்றும் சங்கர் (21) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
* பெசன்ட்  நகர் எலியட்ஸ் கடற்கரையில்  நேற்று மாலை 65 வயது மதிக்கத்தக்க பெண் சடலம்  கரை ஒதுங்கியது. சாஸ்திரி  நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
* ராயபுரம் வெங்கடேசன் தெருவை சேர்ந்தவர் நிர்மலா (55). கடந்த 11ம் தேதி அதே பகுதியில் நடந்து சென்றபோது வேகமாக வந்த கார் நிர்மலா மீது மோதியது. படுகாயமடைந்த அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிர்மலா இறந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த மண்ணடியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவனை கைது செய்து கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mallakamb_mumbai

  மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

 • varanasi_modi123

  டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

 • china_lamfesti1

  சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

 • 2mili_nall

  காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

 • pakisthan_saudi1

  பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்