SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மது போதை தகராறில் வாலிபர் குத்திக்கொலை : நண்பனுக்கு வலை

2019-01-19@ 00:33:39

பல்லாவரம்: பல்லாவரம் அருகே மது போதை தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். தப்பியோடிய அவரது நண்பனை போலீசார் தேடி வருகின்றனர். பல்லாவரம் அடுத்த பம்மல், ஆதாம் நகர், 3வது தெருவை சேர்ந்தவர் மணி (38). இவர், சொந்தமாக மாட்டு வண்டி வைத்து, அதில் வாடகைக்கு சரக்குகள் ஏற்றி இறக்கி பிழைப்பு நடத்தி வந்தார். நேற்று வேலை முடிந்ததும் மணி தனது நண்பனுடன் பம்மல் நாகல்கேணி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். இருவரும் மது அருந்தி விட்டு வெளியே வந்து, அருகில் உள்ள பெட்டிக் கடையில் சிகரெட் வாங்கியதாக கூறப்படுகிறது. இதில் யார் பணம் தருவது என்ற தகராறில் நண்பர்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த நண்பர் தான் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கத்தியால் மணியை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

மணியின் அலறல் சத்தம் கேட்டு திரண்டு வந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக மணியை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணியை பரிசோதித்த மருத்துவர்கள் மணி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மணியின் நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர். குடி போதையில் நண்பனே வாலிபர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்