SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டோக்கன் முறைகேடு

2019-01-19@ 00:03:37

மெரினா புரட்சிக்கு பிறகு ஜல்லிக்கட்டு எந்த சிரமமும் இல்லாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஆண்டை விட இவ்வாண்டு முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்பட்டு காணும் பொங்கல் நாளில் அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பரிசுகளை அள்ளிய மாடுபிடி வீரர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழரின் பாரம்பரிய விளையாட்டாகவும், உலகப்பிரசித்தி பெற்றதாகவும் கருதப்படும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை காண உலக நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்காக பிரத்யேக மேடை அமைத்து தரப்பட்டிருந்தது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 729 காளைகள் சீறிப்பாய்ந்தன. இவற்றை 690 வீரர்கள் களத்தில் இறங்கி அடக்கினர். 30 வீரர்கள் காயமடைந்தனர். ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடப்பதால், மாடுபிடி வீரர்கள் பாதுகாப்புக்கு
தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் கூடுதல் கவனம் செலுத்தலாம். கார், தங்கம், பணம் என்று பரிசு பொருட்களை அள்ளி வழங்கும் விளம்பரதாரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்கள் வீரர்களுக்கு காயம் ஏற்படாத வகையில் மார்பு பகுதியில் இருந்து வயிற்று பகுதிவரையிலான கவசத்தை வழங்கலாம். அடுத்த ஆண்டு இது போன்ற பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும். விளையாட்டு தான் என்றாலும் மனித உயிர் அதைவிட மகத்தானது என்பதையும் உணர வேண்டியிருக்கிறது. இதே போன்று
ஜல்லிக்கட்டில் தங்கள் காளைகளை பங்கேற்க செய்ய வேண்டும் என்று அதன் உரிமையாளர்கள் 6 மாதத்துக்கு முன்பிலிருந்தே காளையை கஷ்டப்பட்டு பழக்கப்படுத்தி, களத்தில் முறையாக பணத்தை கட்டி டோக்கன்களை பெறுகிறார்கள். ஆனால் இது போன்று வழங்கப்படும் டோக்கனில் முறைகேடு நடப்பதாகவும், பலருக்கு போலி டோக்கன்கள் வழங்கப்பட்டுவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

அலங்காநல்லூரில் 1,400 காளைகள் பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 450 காளைகளை கணக்கில் கொண்டுவராமல் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு டோக்கன் வினியோகம் செய்து முறைகேடு நடத்தியுள்ளதாக போட்டியில் பங்கேற்க முடியாத காளை உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இனிவரும் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டியை முறைப்படுத்த வேண்டும். இதற்காக தனி குழு அமைத்து காளை ேதர்வு, டோக்கன் வழங்குதல் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும். காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்களின் கோரிக்கைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்ய தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும். இதற்கு மத்திய குழுவினர் ஒத்துழைக்க வேண்டும். முதலிலேயே கட்டுப்பாடுகளை நிர்ணயிக்காமல் களத்தில் திடீரென கால்நடைகளை பரிசோதிப்பதில் கட்டுப்பாடுகளை விதிப்பதை தவிர்க்க வேண்டும். இது போன்ற குறைகளையும், முறைகேடுகளையும் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டின் போதாவது முன்கூட்டியே களைய வேண்டும் என்பது தான் காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • chinadance

  சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

 • Autoshow2019

  கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

 • thaaymoli_thinam12

  உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

 • BeijingPalacelight

  வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்

 • mumbai_vivasayigal11

  மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்