SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டெல்லியில் கடும் பனிமூட்டம்..... ரயில், விமான சேவைகள் பாதிப்பு: வாகன ஓட்டிகள் அவதி

2019-01-18@ 09:50:21

டெல்லி: டெல்லியில் இன்று காலை கடுமையான பனி மூட்டம் நிலவியது. இதனால், விமானம், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. சாலிகள் முழுவதும் வெண்புகை மூண்டதுபோல் காட்சியளித்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதன் காரணமாக காலை 5.30 மணியில் இருந்து 7 மணி வரை டெல்லி விமான நிலையத்தில் விமான புறப்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது.  விமான வருகையும் இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டது. அதேபோல், 10க்கும் மேற்பட்ட ரயில்களும் தாமதம் ஆகியுள்ளன.

மேற்கு உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மிக கடுமையான அடர் பனிமூட்டம் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கிழக்குப்பகுதி மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் நகரில் பனிமூட்டம் சிறிது குறைந்து காணப்பட்டது. இங்கு நடந்து வரும் கும்பமேளாவில் கலந்துகொண்ட பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது  புனித நீராடினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்