SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மைக் அமைச்சரின் திகில் பேச்சை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2019-01-18@ 00:25:15

‘‘மைக் அமைச்சர் பத்தி ஏதும் விஷயம் இருக்கா’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘அவருக்கு, கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலை என்ற நினைப்புதான்... சட்டரீதியாக பல தோல்விகளை சந்தித்தாலும் அதைப்பற்றி கவலையேபடாம... இனி திகில் காட்சிகள் வரும்னு ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்..அப்புறம் எஸ்டேட் மேட்டர் டெல்லியில வந்தா நிமிஷத்துக்கு பல லட்சங்களை வாங்கும் நபரை வாதாட வைக்கப்போறாங்களாம்... மாநிலத்துல யாரை நம்பினாலும் பலனில்லை... டெல்லிக்காரங்க வந்து வாதிட்டால்தான் எல்லாம் சரியாக இருக்கும்னு யாரோ ஐடியா சொன்னதால, டிராபிக் மனு வரும்போது டெல்லிவாலாக்கள் ஆஜராக இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஆனால், சேலம் விவிஐபி முகமே, அவர் திகிலோடதான் இருப்பதாக காட்டுதாமே... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘முகத்தில் அவ்வளவு எளிதாக உணர்ச்சிகளை காட்டாதவர்... இப்ப மட்டும் எப்டி காட்டி இருப்பார்... ஆனால் பின்னிருந்து மாங்கனி மாவட்டத்துல காவல்துறையை வாய் திறந்து பேச வைச்சு இருக்காரு... அதாவது, தமிழக விவிஐபி, சொந்த மாவட்டத்திற்கு எப்ப வந்தாலும், உற்சாகமாக ேபட்டி கொடுப்பார். ஆனால் இந்த முறை வந்தபோது, பேட்டியே வேண்டாம்னு சொல்லிட்டாராம். எல்லாம் எஸ்டேட் மேட்டர்தான்... இந்த நிலையில் சரக டிஐஜி பத்திரிகை சந்திப்புக்கு திடீர் அழைப்பு விடுத்தாராம். விவிஐபி உள்ளூரில் இருக்கும்போது டிஐஜி கூப்பிடுவதால், ஏதாவது முக்கிய அறிவிப்பை வெளியிடுவதற்காகத்தான் இருக்கும் என்று, ஒட்டு மொத்த மீடியாவும் சரக ஆபீசில் குவிஞ்சதாம். தானாக வந்து எலி வலையில் சிக்குவதுபோல, கனகராஜ் இறந்தது இயற்கையாக நடந்த விபத்தில் தான். இதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. தற்போது அவரது உறவினர்கள் தேவையில்லாமல் வதந்தி கிளப்புகிறார்கள் என்று சில வார்த்தைகளை கூறி, பிரஸ்மீட்டை முடித்தார் டிஐஜி. அப்படியானால் சம்பவம் நடந்தபோது கோவை சரக போலீசார், நம்ம ஊருக்கு வந்து ஏன் விசாரணை நடத்தினார்கள் என்ற கேள்விக்கு பதிலே இல்லையாம். கொடநாடு விவகாரத்தில் 2 நாட்களாக இறுக்கமான மனதோடு இருந்த விவிஐபியை குளிர வைக்க வேண்டும் என்பதற்காகவே உயர்காக்கிகளின் மூளையில் உதித்தது தானாம் இந்த திடீர் பிரஸ்மீட் ஐடியா’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மனம் குளிர்ந்தாரா விவிஐபி... ’’ என்றார் பீட்டர் மாமா.‘‘அவரு மனசு குளிர்ந்துட்டாரு... ஆனா மஞ்சள் மாவட்ட கலெக்டரால அந்த மாவட்ட அமைச்சர்கள் எல்லோருக்கும் எக்கச்சக்கத்துக்கும் பீபி எகிறிகிட்டு இருக்காம்... மஞ்சள் மாவட்ட கலெக்டர் சமீப நாட்களாக அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறாராம்... ஏற்கனவே இருந்த கலெக்டர், அமைச்சர்கள் நிகழ்ச்சிகளில் மிஸ் ஆகாமல் கலந்துகிட்டு இருந்ததால், நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களை, கலெக்டர் உடனுக்குடன் பரிசீலனை ெசய்து, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் வசம் ஒப்படைத்து விடுவார். அமைச்சர், கலெக்டர் என நேரடியாக மனு சென்றுவிடுவதால், அதற்கென சிறப்பு கவனம் செலுத்தி தீர்வு கிடைச்சதாம்.  ஆனா, இப்ப இருக்கிற கலெக்டர் அடிக்கடி ஆப்சென்ட் ஆகிவிடுவதால் அமைச்சர்களிடம் கொடுக்கிற மனுக்கள் கீழ்மட்டத்துல இருக்கிற அதிகாரிங்ககிட்ட தலைகீழா போகுதாம். இதனால, மனுக்களுக்கு எந்த ரெஸ்பான்சும் இருக்கிறது இல்லையாம். இதப்பத்தி ஆளுங்கட்சி முக்கிய நிர்வாகிகளே, சீனியர் அமைச்சர் கிட்ட சொல்லி வருத்தப்பட்டாங்களாம். இதே மாதிரி கலெக்டர் ஆபீசில் திங்கட்கிழமைதோறும் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கும் கலெக்டர் வருவதில்லை. இங்கும், அடிக்கடி ஆப்சென்ட் ஆகிறார்ன்னு சீனியர் அமைச்சர்கிட்ட தொடர்ந்து புகார் வந்துகிட்டே இருக்கு... மக்கள் பிரச்னையை தீர்க்காத கலெக்டர் மாவட்டத்துக்கு தேைவயில்லைனு அடிப்பொடிகள் அமைச்சர் காதில் ஊதிவிட்டு இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஐஏஎஸ் அதிகாரிகள் கோஷ்டியா சேர்ந்து அமைச்சர்களை, அரசை புறக்கணிக்கிறாங்களோ என்னமோ, சமீபத்துல தீர்மானம் போட்டது இப்போதைக்கு ஞாபகம் வருது. மதுரையில காந்தி திட்டத்துல ஊழல் நடப்பதாக சொல்றாங்களே அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திலேதான் இந்த ஊழல். இந்த திட்டத்திலே வேலை செய்யாத பலரோட பெயரை சேர்த்து விட்டிருக்காங்களாம். அதனால சம்பளம் சம்பந்தப்பட்ட வங்கி கணக்கிலே வரவு வைச்சதும். குறிப்பிட்ட தொகையை அதிகாரிகளுக்கு கொடுத்திடணுமாம்... அந்த வகையிலே ஏகப்பட்ட முறைகேடு நடந்திட்டு இருக்கு... இதுதவிர இந்த போலி கணக்குகளை சரி பார்ப்பதற்காகவே அதிகாரப்பூர்வமற்ற முறையில 6, 7 பேரு ஊராட்சி அலுவலகத்திலே பரபரப்பா வேலைபார்த்திட்டு இருக்காங்க... அவங்களுக்கும் மாசா மாசம் கட்டிங் போகுதாம். ஊழல் வாதிகள் அங்கே போய், இங்கே போய் கடைசியில காந்தி திட்டத்திலேயே கைவைச்சிருக்காங்க... இந்தப்பணம் உயரதிகாரிகள் வரை போகுதாம்.. அதனாலே புகார் செஞ்சாலும் நடவடிக்கை இருக்காதாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தாமரை கட்சி இலை கட்சியோட கூட்டணி பேசப்போகுதா என்ன...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘இப்போதெல்லாம் திரைமறைவு வேலைகள் தான் நடக்குது... இடைக்கால பட்ெஜட் போடும் வரை கூட்டணி பற்றிய பேச்சு வெளியாகாது... ஆனால் ஏற்கனவே சீட் எவ்வளவு என்பது எல்லாம் இறுதி செய்யப்பட்டுவிட்டது... எந்த தொகுதி என்பதுதான் இறுதி செய்ய வேண்டும்... நிதி எவ்வளவு தர வேண்டும்... பிரசார யுக்தி... தேர்தலில் பிற கட்சிகளின் செயல்பாடுகளை முடக்குவது ேபான்றவற்றில் கவனம் செலுத்ததான் தாமரை கட்சியில் இருந்து ஒருத்தர் தமிழகத்துக்கு வர்றார்... எலக்‌ஷன் டைம்ல தங்களுக்கு வேண்டியவர்கள் தமிழகத்துல ஆளுங்கட்சியாக இருக்கணும்னு தாமரை நினைக்குது... அதனால நாடாளுமன்ற தேர்தல் ரிசல்ட் வரை, இலைக்கட்சிக்கு பெரிய அளவில் மத்திய அரசால் பிரச்னை இல்லைனு தி.நகர் பக்கம் டாக் ஓடுது...’’ என்று சிரித்தபடியே சொன்னார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்