SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மோகம் 30 நாள்

2019-01-18@ 00:10:15

அமெரிக்கா மோகம் இன்னமும் இந்திய இளைஞர்களிடம் அதிகளவில் காணப்படுகிறது. அதிக சம்பளம், நுனி நாக்கு ஆங்கிலம், சொகுசு வாழ்க்கை என்று விட்டில் பூச்சிகளாய், அந்நாட்டுக்கு செல்கின்றனர். இந்தியாவில் வேலை இல்லை, சம்பளம் குறைவு என்று காரணத்தை அடுக்கும் இளைஞர்கள், அந்நாட்டில் மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டாலும், அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. இதுபோன்றுதான் அரபு நாட்டு வேலைகளுக்கு ஆசைப்பட்டு, அங்கே சென்று ஒட்டகத்தை மேய்த்தவர்கள் ஏராளம்.

வெளிநாட்டு வேலைகளுக்கு செல்பவர்கள், சில மாதங்கள் வேண்டுமானாலும் சொகுசாக இருக்கலாம். ஆனால், மாதங்கள் செல்லச் செல்ல, வீட்டு நினைப்பு, சொந்த பந்தங்கள் பிரிவு, நண்பர்கள் நட்பு போன்றவற்றை இழந்திருப்பது நன்றாகவே தெரியும். இளைஞர்களாக செல்லும் இந்தியர்கள், திருமணமாகி தங்களுக்கு குழந்தை பிறக்கும்போது மட்டும், கலாச்சார பயம் வந்து, இந்தியாவுக்கு ஓடிவரும் எண்ணத்தில் தவிக்க ஆரம்பிக்கின்றனர். காரணம், அமெரிக்க கலாச்சாரம் வேறு, இந்திய கலாச்சாரம் வேறு.

போன இடத்திலாவது இந்தியர்கள் நன்றாக வாழ்ந்தால் போதும் என்று நினைத்தால், அங்கும் அவர்களுக்கு அவமானம்தான் அதிகம் மிஞ்சியிருக்கிறது. தெற்கு ஆசிய அட்லாண்டிக் கவுன்சில் மையம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், அமெரிக்காவில் வெளிநாட்டு ஊழியர்களின் நிலை குறித்து ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, எச்1பி எனப்படும் உச்சபட்ச வேலை அங்கீகார நிலையில் இருப்பவர்களின் நிலையை இந்த அமைப்பு ஆராய்ந்துள்ளது. இந்த விசாவில் அதிகம் பணியாற்றுவது இந்தியர்கள்தான்.

அமெரிக்காவில், எச்1பி.யில் வேலை பார்ப்பவர்களின் நிலைமை படுமோசமாக உள்ளது. உள்நாட்டவர்களுக்கு அதிக சம்பளமும், வெளிநாட்டவர்களுக்கு குறைந்த சம்பளமும் வழங்கப்படுகிறது. இதுதான் மோசம் என்றால், பணிச்சூழலில் கூட வெளிநாட்டவர்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. அவர்களின் சூழல் மிக மோசமாக உள்ளது. சிலருக்கு மட்டும்தான் இந்த சூழல் உகந்ததாக உள்ளது என்று அறிக்கையில் அடுக்கிக் கொண்டே செல்கிறது இந்த அமைப்பு.வெளிநாட்டு, அதுவும் அமெரிக்க வேலைதான் வேண்டும் என்று அடம் பிடிப்பவர்கள் இந்த அறிக்கையை ஒருமுறை முழுமையாக படித்தால்,‘சர்தான் போய்யா...’ என்று வெறுத்துவிடுவார்கள்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்