SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேருந்து மீது கல்வீசிய வழக்கில் தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

2019-01-17@ 15:35:34

புதுடெல்லி: பேருந்து மீது கல்வீசிய வழக்கில் தண்டனையை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். தமிழக கர்நாடக எல்லை பகுதியில் கடத்த 1998ம் ஆண்டு நடந்த கலவரத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்கியதாக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி மீது புகார் எழுந்தது. கள்ளச்சாராயத்திற்கு எதிராக நடைபெற்ற இந்த போராட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். மேலும் இந்த விவகாரத்தில் மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. எம்.பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்கினை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியது.

இந்த தீர்ப்பின் காரணமாக அதிமுக அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி தனது பதவியை இழக்க நேர்ந்தது. இதையடுத்து, நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாலகிருஷ்ண ரெட்டிக்கு கீழ்நீதிமன்றம் விதித்த தண்டனைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில் தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பாலகிருஷ்ணரெட்டி மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்கக்கோரி நாளை உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 130eng_11

    இங்கிலாந்தில் 130 ஆண்டுகால ஆட்டோமொபைல் வரலாற்றை பறைசாற்றும் கண்காட்சி!!

  • plastic22

    பிரான்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு அமைக்கப்பட்ட செயற்கை தீவு: சுற்றுச்சூழலை பாதுகாக்க புதிய முயற்சி

  • pink_kolkatta11

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக பகல் - இரவு டெஸ்ட் போட்டி : பிங்க் நிறத்தில் ஜொலிக்கும் கொல்கத்தா நகரம்

  • panta22

    சர்வதேச பாண்டா அமைப்பால் தத்தெடுக்கப்பட்ட பழுப்பு நிற பாண்டா: புகைப்படங்கள்

  • 22-11-2019

    22-11-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்